பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மாயா விநோதப் பரதேசி புருஷார்த்தம் வேறொன்று இருக்கின்ற தென்றும், அதை அடைவதற்கு மனிதர் அவரவர்களுக்குக் கடவுளால் ஏற்படுத்தப் பட்டுள்ள கடமைப்படி ஒழுகுவது அவசியம் என்றும் மனோன் மணியம்மாள் உடனே கண்டு புது மனுவியாக மாறி நின்ற தருணத்தில், தனக்குத் தனது தந்தையால் வரிக்கப்பட்ட மணமகனான கந்தசாமி பெண் வேஷந் தரித்து வந்து, தான் அதே மனப்போக்குடையவன் என்பதை ஸ்பஷ்டமாக அவளுக்குக் காட்டிப் போனதை எண்ண எண்ண, மனோன்மணியம்மாள் கந்த சாமியே சகலமான அம்சங்களிலும் தனக்குப் பொருத்தமானவன் என்றும், அவனுக்கு நிகரான மணமகன் தான் எந்த உலகத்தில் தேடினாலும் தனக்கு வாய்ப்பது சாத்தியமற்ற காரியம் என்றும் உறுதியாக நினைத்து விட்டாள். அவனது இயற்கையான அழகையும், புத்தி சாதுர்யத்தையும், கண்ணியமான மனப் போக்கையும் மனனம் செய்யச் செய்ய, அவளது மனம் இரவு பகல் அதே நினைவாக இருந்து அதிலேயே சென்று லயித்து விட்டது. சனிக்கிழமை மாலையில் போலீஸ் கமிஷனரும் மிஸ்டர் வெல்டன் துரையும் வந்து கோபாலசாமியிடம் கிரகித்த விஷயங்களை வெளியிட்டதைக் கேட்டது முதல் அந்த மெல்லியல் மடந்தை கந்தசாமியை நினைத்து நினைத்து மதி மயங்கி சித்தப்பிரமை கொண்டு, விரகவேதனையில் அழுந்தி, இன்பமோ துன்பமோ எனப் பகுத்தறிய இயலாத மகா உரமான புதிய மன உணர்ச்சிகளை அடைந்து தனது படுக்கையில் படுத்த வண்ணம் தத்தளித்திருந்தாள். அதே விஷயத்தை அவள் எண்ண எண்ண அவளது மனத்தில் தேவாமிர்த வெள்ளம் ஊற்றெடுத்துக் கரை புரண்டு வழியத் தொடங்கியது. மகா விஷ்ணுவின் மோகனா வதாரம் போல சகலமான ஜகத்தையும் மோகிக்கச் செய்யத் தகுந்த கண்கொள்ளா எழிலோடு பெண்ணுருக் கொண்டு வந்திருந்த கந்தசாமியின் ஜாஜ்வல்லியமான சுந்தர ரூபம் மனோன்மணியம் மாளது கண்களுக்கு எதிரில் அவளைப் பார்த்து ஆனந்தமாய்ப் புன்னகை செய்த வண்ணம் நிற்பது போலவே தோன்றியது. அன்றைய தினம் நடந்த சிவபூஜையைக் கருதி அவள் ஆகாரமே கொள்ளாதிருந்தவள் ஆதலாலும், இரவு முழுதும் துக்கமே பிடியாதவளாய் இருந்தமையாலும் நாழிகை செல்லச் செல்ல,