பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177 அவளுக்குக் கனவிற்கும் நனவிற்கும் வித்தியாசமே தெரியாமல் போய் விட்டது. கந்தசாமியின் நாடகம் அவளது மனமாகிய அரங்க மேடையில் ஓயாமல் நடந்து கொண்டே இருந்தமையால், அது அப்போதே நடப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவளது மனம் நினைப்பதற்குத் தகுந்தபடி அவளது வாயிலும் சொற்கள் தாமாகவே அப்போதைக் கப்போது தோன்றிக் கொண்டிருந்தன. மறுநாள் காலையில் வெகுநேரம் வரையில் அவள் தனது சயனத்திலேயே பிதற்றிக் கொண்டு படுத்திருந்தாள். பொழுது விடிந்து விட்டதோ, அல்லது, அப்போதும் இரவாகவே இருக்கிறதோ என்பதே அவளுக்குத் தெளிவுபடாதபடி அவளது மனம் அவ்வளவு உரமாகக் கந்தசாமியைப் பற்றிய கவனமே கவனமாகக் கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக அவள் வெகு நேரம் வரையில் எழுந்து வெளியில் வராததைக் கண்டு அவளது வேலைக்காரி சந்தேகங் கொண்டு, அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து அந்த மடந்தையைத் தட்டி எழுப்பினாள். அவளது மாந்தளிர் போன்ற மேனி அக்கினி ஜ்வாலையாய் வீசிக் கொண்டிருந்தது. அவளது வாய் சம்பந்தமற்ற சொற்களைக் கூறின. அதை உணர்ந்த வேலைக்காரி மிகுந்த கலவரமடைந்து அவளை மேன்மேலும் தட்டி எழுப்பி உட்காரவைக்க, அப்போதே அவளுக்குச் சிறிதளவு தன் சுய அறிவு ஏற்பட்டது. வேலைக்காரி அவளிடம் வாஞ்சை யாகப் பேசத் தொடங்கி, "ஏன் அம்மா ஒரு மாதிரியாய்ப் படுத்திருக்கிறாயே! உடம்பு என்ன செய்கிறது? நேற்று முழுதும் பட்டினி கிடந்தது இப்படி உன் உடம்பைச் சீர்குலைத்து விட்ட தென்றே நினைக்கிறேன். எழுந்து பல் தேய்த்துக் கொண்டு கொஞ்சம் ஆகாரம் பார்த்துக் கொண்டால், உடம்பு சரியான நிலைமைக்கு வந்துவிடும். எழுந்திரம்மா" என்றாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் பேய் கொண்டவள் போல மருள மருள விழித்து அப்படியே மயங்கி ஆடி விழுந்து' சிறிது நேரம் கழித்துப் பேசத் தொடங்கி, "நேற்று முதல் எனக்கு உடம்பில் இன்னதென்று சொல்ல முடியாத அவஸ்தையாக இருக்கிறது. வயிற்றில் பசியே இல்லை. நீ ஆகாரம் என்ற சொல்லை எடுக்கும் போதே எனக்குக் குமட்டல் எடுக்கிறது. எனக்கு ஒன்றும் தேவையில்லை. பேசாமல் படுத்துக் கொண் loss.so.u.HH-12