பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.78 மாயா விநோதப் பரதேசி டிருப்பதே ஆனந்தமாகத் தோன்றுகிறது. என் உடம்பு நெருப் பாய்ப் பற்றி எரிகிறது. மனம் அப்படியே படபடத்துத் தவித்துக் கொண்டே இருக்கிறது. என்ன செய்வதென்பது தெரியவில்லை" என்று கூறிவிட்டு, அப்படியே துவண்டு படுக்கையில் சாய்ந்து விட்டாள். அதைக் கண்ட வேலைக்காரி திடுக்கிட்டுப் பதறிப் போய், "அம்மா! நீ சொல்வதைக் கேட்க, என் மனம் பெருத்த திகில் கொள்கிறது. ஒருவேளை உனக்குப் பெரிய அம்மை காணுமோ என்னவோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும், நான் உடனே போய் அப்பாவை அழைத்து வருகிறேன். டாக்டர் களைத் தருவித்துப் பார்த்தால், உண்மை இன்னதென விளங்கிப் போகும். அதற்குத் தகுந்தபடி வைத்தியம் செய்யலாம்" என்று உருக்கமாக வருந்திக் கூறினாள். அதைக் கேட்ட மனோன்மணி யம்மாள், "ஐயோ! நீ பேசுவதைக் கேட்பதே எனக்கு மகா வேதனையாக இருக்கிறதே! இன்னும் அப்பாவையும் டாக்டர் களையும் கூப்பிட்டால், அதை நான் தாங்கவே முடியாது. நீ யாரையும் கூப்பிட வேண்டாம். பேசாமல் அப்பால் போ, நான் கூப்பிடும் போது வா" என்று நயந்து இறைஞ்சிக் கூறினாள். வேலைக்காரி, "குழந்தாய்! நம்முடைய சம்பந்தி ஐயா சிவ பூஜைக்கு ஆரம்பம் செய்து விட்டார்கள். உன்னை அப்பா அழைப்பார்களே; அதற்கு நான் என்ன சொல்லுகிறது? எல்லா வற்றிற்கும் நீ எழுந்து பல் தேய்த்துக்கொள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மனோன்மணியம்மாள் சித்தப்பிரமை கொண்டவளாய்ச் சிறிது ஆடி விழுந்த பின் பேசத் தொடங்கி, "ஜலம் கொஞ்சம் கொண்டு வா, நான் இப்படியே பல் தேய்த்துக் கொள்ளுகிறேன். எனக்கு உடம்பு இப்படி இருப்பதாக அப்பாவிடம் சொல்ல வேண்டாம். அவர் கூப்பிட்டால், நான் அயர்ந்து படுத்துத் தூங்குவதாய்ச் சொல்லிவிடு" என்றாள். வேலைக்காரி அதற்கிணங்கி, உடனே வெளியில் சென்று ஜலம் பற்பொடி முதலியவற்றைக் கொணர்ந்து கொடுக்க, மனோன்மணி யம்மாள் தட்டித்தடுமாறி எழுந்து அப்பால் சென்று பல் தேய்த்துத் தனது தேகத்தைச் சுத்தி செய்து கொண்டு அப்படியே ஒரு கை