பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 ஜலத்தைப் பருகிவிட்டு வந்து கட்டிலின் மீது படுத்துக் கொண்ட அடுத்த நிமிஷம் அவளது கண்கள் மூடிக்கொண்டன. அவளது அகக்கண்ணில் மறுபடியும் கந்தசாமியின் இனிய வடிவம் தோன்றி ஆனந்த நிர்த்தனம் செய்யத் தொடங்கியது. அந்தப் பெண்மணி தனக்கருகில் வேலைக்காரி இருக்கிறாள் என்பதையும், தனது தேகத்தையும் மறந்து அந்த மானசீக நாடகத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தியபடி அதிலேயே ஆழ்ந்து உயிரற்றவள் போல ஆய்விட்டாள். வேலைக்காரி வெகுநேரம் வரையில் நின்று பார்த்தாள், மறுபடி மெதுவாய் இரண்டு மூன்று முறை அந்த மடந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தாள். மறுமொழி இல்லை. அவள் அயர்ந்து தூங்குகிறாள் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் வேலைக்காரி வெளியில் போய் விட்டாள். அன்றைய பகலில் வேலாயுதம் பிள்ளையின் சிவபூஜை நடந்தேறியது. முதல் நாள் செய்தது போல மனோன்மணியம் மாளோடு தாம் போக வேண்டும் என்று பட்டாபிராம பிள்ளை எண்ணி, அவளது. வருகையை வெகுநேரம் வரையில் எதிர்பார்த் திருந்து நேராக அவளது விடுதிக்குப் போய்ச் சேர்ந்து அவள் கட்டிலின் மீது படுத்து காடாந்தகாரமாய்த் துரங்கிக் கொண்டிருப் பவள் போலக் காணப்பட்டதை உணர்ந்து, அவளுக்கு உடம்பு சற்று அசெளக்கியப் பட்டிருப்பதாகவும், துங்கி விழித்தால், அது சரிபட்டுப் போகும் என்று தீர்மானித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓசை செய்யாமல் வெளியில் சென்று தாம் மாத்திரம் சிவபூஜைக்குப் போய் இருந்தார். அன்று மனோன்மணியம்மாள் பூஜைக்கு வரவில்லை என்பதை மற்றவர் எவரும் கவனிக்காமல் தத்தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டே இருந்து விட்டார்கள். பூஜை அதிதி போஜனம் முதலியவை நிறைவேறின. பட்டாபிராம பிள்ளை சிறிதளவு ஆகாரம் பார்த்துக் கொண்டார். மனோன்மணியம்மாள் நன்றாகத் துங்கி எழுந்து போஜனம் செய்து கொண்டு வழக்கப்படி தனது தெளிவான நிலைமையை அடைந்திருப்பாள் என்று அவர் எண்ணித் தனது கச்சேரியில் இருந்து வந்திருந்த சில காகிதக் கட்டுகளைப் படித்து அதற்குரிய