பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 羅義)#「リff விநோதப் பரதேசி புதல்வி வாடி வதங்கித் துவண்டு முற்றிலும் அலங்கோலமாயப் படுத்திருப்பதைக் கண்டு அபாரமான திகிலும் கலக்கமும் அடைந்து, "அம்மா அம்மா! மனோன்மணி மனோன்மணி" என்று இரண்டு மூன்று தரம் அன்பாக அழைத்துப் பார்த்தார். மறுமொழி இல்லை. அவரது திகிலும் நடுக்கமும் அதிகரித்தன. அவர் கட்டிலண்டை நெருங்கி, அவளது முதுகில் மெதுவாக இரண்டு மூன்று முறை தட்டி, "மனோன்மணி மனோன்மணி" என்று மிகுந்த அன்போடும் உருக்கமாகவும் கூப்பிட, அந்தப் பெண்மணி மெதுவாகத் தனது கண்களைத் திறந்து கொண்டு பார்த்து தனது தந்தை வந்து நின்றதைக் கண்டு திடுக்கிட்டு வாரிச் சுருட்டிக் கொண்டெழுந்து கட்டிலை விட்டுக் கீழே இறங்கி அலங்கோலமாய் இருந்த தனது கேசத்தையும் ஆடையையும் சீர்திருத்திக் கொண்டு நாணிக் கோணி துர விலகி நின்றாள். அதற்கு முன் இங்கிலீஷ் நாகரிகத்தின்படி அவள் சிறிதும் கூச்சமின்றி தனது தந்தையோடு சமமாக நின்றும், சமமாக நாற்காலியில் உட்கார்ந்தும் நேருக்கு நேர் துணிவாகப் பேசியதற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டாள். அவளை அறியாமல் அவளது தேகம் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்ற குணங்களைத் தானாகவே தோற்றுவித்தது. தான் ஏதோ பெருத்த தவறு செய்துவிட்டவள் போல அவள் தனது தந்தையின் முகத்தைப் பார்க்க வெட்கித் தனது பார்வையை அப்புறமும், கீழேயும் செலுத்தி, வேறே எதையோ கவனிப்பவள் போலத் தனது சேலைத் தலைப்பைப் பிடித்து நெருடிய வண்ணம் நின்றாள். அவளது தேகம் வாடித் துவண்டு தளர்ந்து போயிருந் தமையால், அவள் நிற்கமாட்டாதபடி அவளது கால்கள் தள்ளாடின. இடை மெலிந்து அசைந்தாடியது. சிரம் கழுத்தின் மேல் நிற்க ஆற்றாமல் அங்குமிங்கும் சாய்ந்தது. அவளது நூதன தோற்றத்தைக் கண்டு வியப்பும் கலக்கமும் அடைந்த பட்டாபிராம பிள்ளை, "அம்மா ஏன் இப்படி இளைத்துப் போயிருக்கிறாய்? நேற்று நான் வந்து பார்த்த போது நீ தூங்கிக் கொண்டிருந்தாய்;. நீ சாதாரணமாய்ப் படுத்திருக்கிறாய் என்றும், உன்னை எழுப்பக் கூடாதென்றும் நினைத்தல்லவா. நான் பேசாமல் போய்விட்டேன். நீ இரண்டு தினங்களாய் சாப்பிடவே இல்லையாம். அந்த முட்டாள் வேலைக்காரி இதுவரையில் பேசாதிருந்து விட்டு இப்போது தான்