பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 183 வந்து என்னிடம் இதைத் தெரிவித்தாள். வயிறு மந்தமாக இருக்கிறதா? நான் இப்போது தொட்டுப் பார்த்ததில், கடுமையான ஜூரம் போலத் தெரிந்தது. நீ ஏன் எழுந்து துர நிற்கிறாய்? வந்து கட்டிலிலேயே படுத்துக்கொள். நான் டாக்டரை வரவழைக்கிறேன்" என்று நிரம்பவும் கணிகரமாகக் கூறினார். அதைக் கேட்ட பெண்மணி வாய் திறந்து பேசுவதற்கும் லஜ்ஜை அடைந்தவளாய்ச் சிறிது நேரம் கீழே குனிந்தபடி நின்று, "அப்பா! டாக்டரை அழைக்க வேண்டாம். எனக்கு உடம்பில் வியாதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பசி தாகம் முதலிய எதுவும் உண்டாகவில்லை. இன்னம் கொஞ்சகாலம் உடம்பைப் பேசாமல் போட்டிருந்தால் சரிப்பட்டுப் போகும் என்று நினைக்கிறேன்" என்றாள். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, "எப்போது முதல் உடம்பு இப்படி இருக்கிறது? என்ன காரணத்தி னால் உடம்பு இப்படி இருக்கிறதென்பது தெரியவில்லையா?" என்றார். - மனோன்மணியம்மாள் சிறிது தயங்கி மேலும் கீழும் பார்த்து, "அப்பா! எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இந்த மன்னார்குடியாரை நான் கண்டது முதல், என் மனசில் ஒரு மாதிரி யான மன எழுச்சி உண்டாகிக் கொண்டே இருந்தது. பசி தாகம் முதலிய எதுவும் தோன்றாமல் இருந்தது. அவர்கள் செய்த பூஜையைப் பார்த்த முதலும், மிஸ்டர் வெல்டன் துரை சொன்ன ஆச்சரியகரமான செய்தியைக் கேட்ட முதலும் என் மனசு கட்டிலடங்காமல் பொங்கிப் பூரித்துக் கொண்டே இருக்கிறது. பசி தாகம் முதலிய எதுவும் தோன்றவில்லை. வேலைக்காரி உங்க ளிடம் இதைப் பற்றிச் சொல்வதாகச் சொன்னாள். நான்தான் சொல்ல வேண்டாம் என்றேன்" என்றாள். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை பிரமிப்படைந்து திகைத்துப் போய்ச் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பிறகு மிகுந்த வாஞ்சையோடு தமது குமாரத்தியை நோக்கி, "அம்மா புது மனிதர்களையும், நமக்கு நெருங்கிய பந்தக்கள் ஆகப் போகிறவர் களையும் முதன் முதலில் காணும் போது, எல்லோருக்கும் இதே