பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 மாயா விநோதப் பரதேசி மாதிரி தான் ஒருவித மன எழுச்சி உண்டாகும். இது இயற்கைதான். ஆனாலும், அதற்காக நீ ஒரேமுட்டாய் இரண்டு மூன்று தினங் களாய்த் தண்ணிகூட அருந்தாமல் இருந்தால், அந்த உடம்பின் கதி என்ன ஆகிறது? நீ உடம்பை இப்படி முற்றிலும் அசட்டை செய்வது ஒழுங்கல்ல. பிடித்த வரையில் கொஞ்சம் ஆகாரம் பார்த்துக்கொள். அதுவுமன்றி நான் உன்னிடம் முக்கியமான ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ சரியான மறுமொழி சொல்ல வேண்டும்" என்றார். மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு அவர் என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ என்று அஞ்சி அவரது முகத்தை ஆவலோடு நிமிர்ந்து பார்ப்பதும் கீழே குனிவதுமாய் நின்றாள். பட்டாபிராம பிள்ளை, "அம்மா! நீ இந்த இரண்டு தினங்களாய் இவர்களுடன் நெருங்கிப் பார்த்தாய். அதுவுமன்றி, அன்றைய தினம் கந்தசாமி யுடனும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாய். உன்னுடைய அபிப்பிராயம் இப்போது எப்படி இருக்கிறது? இவர்களுடைய சம்பந்தம் உன் மனசிற்குப் பிடிக்கிறதா இல்லையா? நீ பயப் படாமல் உன் மனசை வெளியிட்டுச் சொல். நீ எதையும் சொல் லாமல் மனசிற்குள்ளாகவே வைத்துக் கொண்டு உன் உடம்பைச் சித்திரவதை செய்து கொள்வது சரியல்ல. வெட்கப்படாமல் என்னிடம் நிஜத்தைச் சொல்லிவிடு" என்றார். அந்த எதிர்பாராத சொல்லைக் கேட்டு அந்த மடந்தை திடுக்கிட்டு வெட்கி என்ன மறுமொழி கூறுவதென்பதை அறியாதவளாய்க் கீழே குனிந்தபடி மெளனமாக நின்றாள். மன்னார்குடியாரது சம்பந்தம் வேண்டாம் என்று அவள் நினைப்பது போன்ற அருவருப்புக் குறியாவது, அதிருப்திக்குறியாவது, கோபக்குறி யாவது, அவளது முகத்தில் காணப்படவே இல்லை; அவளது மனம் கட்டிலடங்காக் களிப்பையும் குதூகலத்தையும் கொண்டு, அதை வெளியில் காட்டாமல் மறைக்க முயல்வது போன்ற குறியே முகத்தில் த்ெளிவாகத் தெரிந்தது; கந்தசாமியின் மீது காதல் கொண்டே அவள் அவ்வாறு விரக வேதனையால் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை ஒரு நொடியில் யூகித்துணர்ந்து