பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185 கொண்ட பட்டாபிராம பிள்ளை அவளை நோக்கி, "அம்மா! சரி, நீ என் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டாம்; நீ பட்டினி கிடப்பதால், உன் உடம்பு அலுத்துப் போய்த் தத்தளிக்கிறது. நீ வந்து மறுபடி கட்டிலில் படுத்துக்கொள். எப்படியாவது பிரயாசைப்பட்டு நீ வேளைக்கு வேளை ஏதாவது கொஞ்சம் ஆகாரம் பார்த்துக்கொள்; மற்ற எந்த விஷயத்தையும் உன்னுடைய பிரியப்படி நான் கூடிய சீக்கிரம் நிறைவேற்றி வைக்கிறேன். நீ கொஞ்சமும் கவலைப்படாதே அம்மா" என்று கூறியபின் அவ்விடத்தை விட்டு நேராக வேலாயுதம் பிள்ளை இறங்கியிருந்த விடுதிக்குப் போய்க் கண்ணப்பாவைக் கண்டு அவன் மூலமாய் மனோன்மணியம்மாளது நிலைமையைத் திரிபுர சுந்தரியம்மாளுக்குத் தெரிவித்து, தாம் என்ன செய்வதென்பதைப் பற்றி அபிப்பிராயம் கேட்க, திரிபுரசுந்தரியம்மாள் சிறிது நேரம் சிந்தனை செய்து, மனோன்மணியம்மாளிடம் தான் போனால் அவள் தன்னிடம் அவ்வளவு தாராளமாக மனதை வெளியிட மாட்டாள் என்றும், வடிவாம்பாளை அனுப்பினால், அவள் மனோன்மணியம்மாளோடு கூடவே இருந்து, அவளை அப்போ தைக்கப்போது உண்ணச் செய்து, அவளது மனதிற்குத் தேறுதல் கூறிக் கொண்டிருப்பாள் என்று நினைத்து அதைப் பட்டாபிராம பிள்ளையிடம் வெளியிட, அவர் அதற்கிணங்கினார். அவர்கள் உடனே ஒரு வேலைக்காரியை அழைத்து, அவளுடன் சேர்த்து வடிவாம்பாளை அனுப்பி வைத்தார்கள். பட்டாபிராம பிள்ளை மனோன்மணியம்மாளை விட்டு வந்த அரை நாழிகைக் கெல்லாம் வடிவாம்பாளும் வேலைக்காரியும் அங்கே போய்ச் சேர்ந்தனர். அப்போதும் துவண்டு சோர்ந்து கண்மூடிக் கட்டிலின் மீது சயனித்துக் கொண்டிருந்த அந்த மடமங்கை மனிதர் வந்த காலடி ஒசையைக் கேட்டு விழித்துக் கொண்டு பார்த்து, வடிவாம்பாள் முன்னும், வேலைக்காரி பின்னுமாய் வந்ததைக் கண்டாள். iskoss; அற்புதமான இயற்கையழகும், நாகரிகமான சிறந்த அலங்காரமும் பெற்றவளாய், அடக்கம், பணிவு, மரியாதை, வாஞ்சை, நாணம் முதலிய இனிய குணங்கள் எல்லாம் அவளுருவாக வந்தனவோ என நினைக்கத் தக்கபடி புன்னகை தவழ்ந்த இனிய முகத்தோடு, தோகைமயில் போல தனக்கருகில் வந்த வடிவாம்பாளைக் கண்ட