பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மாயா விநோதப் பரதேசி விசனமும் அடைந்தவராகவே திரும்பி வந்து கொண்டிருந்தார். கந்தசாமி காணாமல் போயிருந்த துயரம் நூறுமடங்கு வருத்திய தென்றால், மனோன்மணியம்மாள் ஊணுறக்கமின்றித் துரும்பாய் மெலிந்து அவனையே நினைத்துச் சிறுகச் சிறுகத் தனது உயிரை விட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை கேட்கக் கேட்க, அவரது விசனமும், கவலையும் ஆயிரம் மடங்கு பெருகி, அவரும் ஊணுறக்கமின்றி இரவு பகல் அதே நினைவாய் இருந்து தவிக்கும் படி செய்தன. வடிவாம்பாள் எப்போதும் மனோன்மணியம்மாளுக்குப் பக்கத்திலேயே இருந்து இதமான மொழிகள் பேசி வேளைக்கு வேளை அவளுக்கு ஆகாரம் கொடுக்க முயற்சித்தாள் ஆனாலும், மனோன்மணியம்மாளது மனநிலைமை கட்டிலடங்காததாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை இரண்டொரு வாய் பாலைச் செலுத்துவது கூட வடிவாம்பாளுக்கு மிகுந்த பிரயாசையாகி விட்டது. மனோன்மணியம்மாள் கட்டிலை விட்டுக் கீழே இறங்கினால், அவள் தட்டுத் தடுமாறிப் பல இடங்களில் விழத் தொடங்கினாள். அவள் கடுமையான நோய் கொண்டிருக்கி றாள் என்பது வேலாயுதம் பிள்ளை முதலிய எல்லோருக்கும் தெரிந்து போனமையால், அவர்களும் அதைப்பற்றி மிகுந்த துயரமும் கலக்கமும் அடைந்து இரவு பகல் அதே கவலை கொண்டு வருந்தலாயினர். பூஜைக் காலங்களில், அவள் அவசியம் வந்து கற்பூர ஆரத்தியைக் கண்டு சுவாமி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனால், எப்படியும் கடவுளுக்கு மனதிரங்கும் என்று அவர்கள் கூறினர் ஆதலால், அந்தப் பெண்மணிக்கு வடிவாம்பாள் முதலியோர் கைலாகு கொடுத்துப் பூஜை செய்யும் இடத்திற்கு அவளை அழைத்து வந்து அது முடிந்தவுடன், அவளது சயனக் கிரகத்திற்கு அழைத்துப் போயினர். வடிவாம்பாள் இரவு பகல் சிறிதும் அலுக்காமல் அந்த மடந்தைக்குப் பக்கத்திலேயே இருந்தும், வேளை தவறாமல் முயன்று அரும்பாடுபட்டு அவளுக்கு ஏதேனும் சொற்ப ஆகாரமாவது உண்பித்தும், அவள் வாந்தி எடுத்தால் அதைத் தானே ஏற்றும், அவளது ஆடைகளை அடிக்கடி மாற்றியும், இதமான மொழிகளை அடிக்கடி பேசி