பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 193 கொட்டுவது போன்ற மனவேதனையை உண்டாக்க ஆரம்பித்து விட்டது. பெண் வேஷத்தோடு கந்தசாமி மறுபடி அவளது அகக் கண்ணில் தோன்றி அவளைப் பார்த்து அழகாய்ப் புன்னகை செய்து அவளது உயிரைக் குடிக்கத் தொடங்கினான். அவள் தூக்கமும் கொள்ளவில்லை; பக்கத்திலிருந்த வடிவாம்பாள் சொன்னதையும் கவனிக்கவில்லை. இரண்டிற்கும் நடு மத்திமமான் திரிசங்கு சொர்க்கத்தில் அவள் இருந்து தனது இஷ்ட தெய்வமான கந்தசாமியை நினைத்துக் கடுந்தவம் புரியத் தொடங்கின்ாள். வடிவாம்பாள் அவளோடு கூடவே இருந்து வந்தாள். அன்றைய பொழுதும் கழிந்தது. மறுநாளாகிய செவ்வாய்கிழமை முதல் வேலாயுதம் பிள்ளையின் சிவபூஜை பெருத்த தேவாலயங்களில் நடக்கும் திருவிழாவைப் போல அபாரமான ஏற்பாடுகளுடன் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. சுந்தரம் பிள்ளையும், மற்ற மிராசுதார்களும் ஏராளமான பணத்தொகை செலவு செய்து, தினம் ஐம்பதினாயிரம் அதிதிகளுக்கு மேல் அன்னதானம், வஸ்திரதானம் முதலியவற்றை வழங்கினர். தினம் தினம் ஆயிரக்கணக்கான சுமங்கலிகளுக்கு விருந்து, புடவை தானம் முதலியவை நடத்தப் பட்டன. அந்தப் பூஜையின் வைபவத்தைக் கண்டும் கேட்டும் சென்னப்பட்டணத்தில் உள்ள ஜனங்கள் எல்லோரும் பெரிதும் வியப்பும், சந்தோஷமும் அடைந்து, இரவு பகல் அதே பேச்சாகப் பேசி வேலாயுதம் பிள்ளை வீட்டாரைப் பற்றி அசாத்தியமாகப் புகழத் தலைப்பட்டனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு தினங்களுக்குள், அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாயின. அதற்கு மேல் கந்தசாமி வருகிற வரையில் அது போலவே செலவு செய்ய அவர்கள் சித்தமாய் இருந்தனர். கந்தசாமி காணாமல் போயிருந்ததைப் பற்றி அந்தப் பூஜை, தான தருமங்கள் முதலியவை நடத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து ஜனங்கள் எல்லோரும் தங்களது கவலைகளையும் துன்பங்களை யும் அடியோடு மறந்து கந்தசாமி வெகு சீக்கிரம் கூேடிமமாய்த் திரும்பி வரும்படி செய்ய வேண்டும் என்று இரவு பகல் கடவுளை நிரம்பவும் உருக்கமாக வேண்டிக் கொண்டபடி இருந்தனர். பட்டாபிராம பிள்ளை அடிக்கடி போலீஸ் கமிஷனரிடம் போய் ஏதாவது தகவல் தெரிந்ததா என்பதைக் கேட்டு ஏமாற்றமும், மா.வி.ப.பி-13