பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 92 மாயா விநோதப் பரதேசி அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் எவ்வித மறுமொழியும் கூறாமல் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். அந்தப் பெண் மணியின் அப்போதைய மனநிலைமை எப்படித்தான் இருந்த தென்று சொல்வது அசாத்தியமான காரியம் என்றே கருத வேண்டும். அவள் கந்தசாமியின் மீது கடுமையல் கொண்டு, அன்னபானாதிகளை வெறுத்துத் தனது தேகத்தை அசட்டை செய்து, மெய்ம்மறந்து, அவனையே எண்ணி எண்ணி உருகித் தவித்திருந்த சமயத்தில் வடிவாம்பாள் வந்து வாத்சல்யத்தோடு உபசரித்தது நிரம்பவும் இதமாக இருந்ததன்றி, பிந்திய காலத்தில் அவளோடு தான் அன்னியோன்னியமாய் ஒன்று கூடி எப்போதும் இருக்கப் போகிறவள் ஆதலாலும், அவள் தனது கணவரது தமயனாரின் மனையாட்டி ஆதலாலும், அவள் மகா உத்தமி என்று எல்லோராலும் புகழப்பட்டவள் ஆதலாலும், அவள் தன்னோடுகூட இருந்தது மனோன்மணியம்மாளுக்குத் தன் கணவனைக் கண்டது போன்ற ஒருவித ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளது விஷயத்தில் தன் மனதில் பொங்கி எழுந்து கரைபுரண்டு வழிந்த வாஞ்சையையும் பிரேமையையும் ஆனந்தத்தையும் தாங்க மாட்டாதவளாய் இருந்த சமயத்தில், தனது கணவருக்குச் சொந்தமான, அரசப் பெருமாட்டிகள் போலக் காணப்பட்ட சுமார் இருபது ஸ்திரீகள் தோன்றி, ஒவ்வொன்றும் இருநூறு முன்னுறு ரூபாய் பெறத்தக்கவையும், ஜரிகையும் பட்டும் தகத்த காயமாய் மின்னப் பெற்றவையுமான சுமார் இருபது சேலைகளையும், நாற்பது ஐம்பது ரவிக்கைகளையும், மற்றும் ஏராளமான சாமான்களையும் கொணர்ந்து கொடுத்தது மன்றி தன்னை அபாரமாகப் புகழ்ந்து மனப்பூர்வமான பிரியத்தோடு தன்னை ஆசீர்வதித்ததையும், தன்னை ஒரு குழந்தை போல மதித்து லாலனபாலனம் செய்து தன்னிடம் கொஞ்சி விட்டுப் போனதையும் எண்ண எண்ண, மனோன்மணியம்மாள் கந்தசாமியின் மீது கொண்ட காதல் நோய் மலைப் போலப் பெருகி முன்னிலும் பதினாயிரம் மடங்கு அதிக உரமாக அவளை வதைக்கத் தொடங்கியது. "அவரை எப்போது காண்போம், எப்போது அவரிடம் ஒரு வார்த்தையாகிலும் பேசுவோம்" என்ற ஏக்கமே பெரிதாய்க் கிளம்பி ஆயிரம் தேள்கள் ஒரே காலத்தில்