பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191 கள் பூர்த்தியாக நிரம்பி இருக்கின்றன. எல்லாம் திரிபுரசுந்தரியம் மாள் செய்த பூஜாபலன். அவர்களுடைய நற்குணத்திற்குத் தகுந்த படிதான் சகலமும் வந்து வாய்க்கிறது. திரிபுரசுந்தரியம்மாளுக்கு எப்படி இரண்டு குழந்தைகளும் இரண்டு சற்புத்திரர்களாக வந்து வாய்த்திருக்கின்றார்களோ, அது போல இரண்டு மருமக்கள்மாரும் விலையில்லா மாணிக்கக்கட்டிகளாக வந்து வாய்த்திருக்கின்றனர்" என்று கூறினர். வேறு சிலர், "இந்தப் புண்ணியவதி வந்து சேரப் போகிற பாக்கியத்தால், நம்முடைய கந்தசாமி எவ்விதக் கெடுதலும் இல்லாமல் செளக்கியமாய் வீடு வந்து சேர வேண்டும்" என்றனர். மற்றும் சிலர், "வராமல் எங்கே போகிறான். அவன் வெகு சீக்கிரம் வந்துவிடப் போகிறான். நாம் எண்ணியபடி கலியாணம் முதலிய சுபச்சடங்குகளை முடித்துக் கொண்டுதான் நாம் ஊருக்குப் போகப் போகிறோம். மனோன்மணியம்மாளும் கந்தசாமியும் பார்வதி பரமேசுவரன் போல நிகரற்ற தம்பதிகளாய் ஆயிரங்காலம் அமோகமாய் வாழப் போகிறார்கள்" என்று கூறி ஆசீர்வதித்தனர். பிறகு எல்லோரும், "குழந்தை! நாங்கள் போய் வருகிறோம். நீ போய்ப் படுத்துக்கொள். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்" என்று நிரம்பவும் உருக்கமாகவும் வாஞ்சையோடும் கூறி, அவளை விட்டுப் பிரிய மனமற்றவராய்த் திரும்பித் திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றனர். வடிவாம்பாள், மனோன்மணியம்மாள், வேலைக்காரி ஆகிய மூவரும் அவ்விடத்தில் தனிமையில் விடப்பட்டனர். வடிவாம் பாள் உடனே மனோன்மணியம்மாளை அழைத்துக் கொண்டு போய்க் கட்டிலின் மீது சயனிக்கச் செய்த பின், வேலைக்காரியைக் கொண்டு விருந்தினர் சன்மானித்த புடவைகள், ரவிக்கைகள், மற்ற வஸ்துக்கள் முதலிய யாவற்றையும் எடுத்து ஒருபுறமாக வைத்து விட்டு அப்பால் போயிருக்கச் செய்தாள். அதன் பிறகு அவளும் மனோன்மணியம்மாளுக்கருகில் உட்கார்ந்து தன் கையால் அவளை அன்போடு அனைத்துக் கொண்டு, "ஏனம்மா உடம்பு அலுப்பாக இருந்தால், இப்படியே கொஞ்சம் துங்கு உடம்பு சரிப்பட்டுப் போகும்; நான் பக்கத்திலேயே இருக்கிறேன்" என்று மிகுந்த வாஞ்சையோடு கூறினாள்.