பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மாயா விநோதப் பரதேசி விட்டு மனோன்மணியம்மாளை நோக்கி, "அம்மா உனக்கு உடம்பு சரியாக இல்லை. இப்படிப்பட்ட பலவீனமான நிலைமையில் நீ இவர்கள் ஒவ்வொருவருக்கு முன்னாலும் போய் உட்கார்ந்து எழுந்து கும்பிட முடியாது. நீ எல்லோருக்கும் பொதுவாக ஒரே தடவையாய்க் கும்பிட்டு இவர்களுடைய ஆசி வாதத்தைப் பெற்றுக்கொள். இவர்கள் எல்லோரும் எங்களுடைய நெருங்கிய பந்துக்கள். உனக்கு உடம்பு சரியாயில்லை என்பது தெரியுமாகையால், இவர்கள் அதைப் பற்றி வித்தியாசமாக எண்ண மாட்டார்கள்" என்று வாத்சல்யம் ததும்பக் கூறினாள். அது வரையில் தான் என்ன செய்வது என்பதை அறியாமல் தத்தளித்து நின்று கொண்டிருந்த மனோன்மணியம்மாள் தனது துர்லபமான நிலைமையையும் பொருட்படுத்தாமல் கீழே உட்கார்ந்து மண்டியிட்டு அங்கிருந்த பெண்பாலோர் எல்லோரையும் நமஸ்கரிக்க, அவர்கள் அவளைப் பலவாறு வாழ்த்தி ஆசீர்வதித் தனர். உடனே வடிவாம்பாள் அங்கிருந்த வேலைக்காரியை அழைத்து, எல்லோருக்கும் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பழம், கற்கண்டு முதலியவை வழங்கச் செய்தாள். அந்த கும்பலில் இருந்த திரிபுரசுந்தரியம்மாள் மனோன்மணி முற்றிலும் தளர் வடைந்து நிற்கமாட்டாதவளாய்த் தவிக்கிறாள் என்பதைக் கண்டு, அங்கிருந்த எல்லோரையும் பார்த்து, "மனோன்மணியம்மாளுக்கு உடம்பு சரியாக இல்லை. அவள் படுத்துக் கொள்ளட்டும், நாம் இருந்தால், அவள் லஜ்ஜைப்படுவாள். ஆகையால், நாம் மறுபடி வந்து பார்க்கலாம்" என்றாள். அங்கிருந்த எல்லோரும், "சரி; அப்படியே செய்வோம்" என்று கூறிக் கொண்டு உடனே குபிரென்று எழுந்தனர். சிலர் மனோன்மணியம்மாளண்டை நெருங்கிப் போய் ஆசையோடு அவளது முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தனர். சிலர் அவளது மோவாயைப் பிடித்து அவளது முகத்தை மெதுவாக நிமிர்த்தி, முகத்தழகை ஆராய்ச்சி செய்து, இரண்டு கன்னங்களையும் இரண்டு கைகளால் வருடித் தங்களது நெற்றிப்பூட்டில் வைத்து திருஷ்டி தோஷம் கழித்தனர். சிலர், "கந்தசாமியின் அழகுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தகுந்த படியே தான் கடவுள் அவனுக்குப் பெண் அமைத்திருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர், "பெண்ணினிடம் நல்ல உத்தம லட்சணங்