பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189 ஐம்பதினாயிரத்திற்குக் குறையாத பெறுமானமுள்ள ஆபரணங் களையும் பட்டாடைகளையும் அணிந்திருந்ததன்றி, எல்லோரும் மிகுந்த பகுத்தறிவு, புத்திசாலித்தனம், மேலான விவேகம் முதலிய குணங்கள் நிரம்பப் பெற்றவர்களாய் இருந்தும், நாணம், அடக்கம், பணிவு முதலிய ஸ்திரீ லட்சணங்கள் பூர்த்தியாய் அமையப் பெற்றவர்களாய்க் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் செல்வந்தர் வீட்டு ஸ்திரியாதலால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தட்டில் இருநூறு, முன்னுறு ரூபாய் பெறத்தக்க உயர்ந்த ஜரிகைப் புடவை, ரவிக்கை, கனிவகைகள், பாக்கு வெற்றிலை, மஞ்சள் முதலிய வஸ்துக்களோடு வந்து எல்லாவற்றையும் மனோன்மணி யம்மாளுக் கெதிரில் வரிசையாக வைத்து விட்டனர். அவ்வாறு வந்த மனிதர்களையும், அவர்கள் கொணர்ந்து வைத்த வரிசைப் பொருட்களையும் கண்டு பிரமித்து ஸ்தம்பித்துப் போன மனோன் மணியம்மாள் தான் என்ன செய்வது அல்லது சொல்வது என்பதை அறியாமல் வெட்கித் தலைகுனிந்து நின்றாள். வடிவாம்பாளே தலைமை வகித்து, 'வாருங்கள், வாருங்கள், இப்படி உட்காருங்கள்" என்று அன்பாக உபசரித்து எல்லோரை யும் வரவேற்று உட்காரச் செய்து அவர்களை நோக்கி, "நீங்கள் இது வரையில், வடிவாம்பாளை விட சிரேஷ்டமானவள் இனி இந்த உலகத்திலேயே இருக்கப் போகிறாளா என்றும், அவளுடைய புருஷர் தான் மகா பாக்கியவந்தர் என்றும் சொல்லி என்னைப் புகழ்ந்து கொண்டே இருந்தீர்களே. இனிமேல் என்னை நீங்கள் அப்படிப் புகழவே மாட்டீர்கள். நான் படிக்காத முட்டாள். பெரியோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்து அது போல நான் எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்ளு கிறவள். இந்த மனோன்மணியம்மாள் கல்வியைக் கரை கண்டவள். அதோடு சகலமான லட்சணங்களும் வாய்ந்து, வாசனையுடைய பொன்மலர் போல இருக்கிறாள். எல்லா விஷயங்களிலும் மனோன்மணியம்மாள் என்னைவிடப் பன் மடங்கு சிரேஷ்டமானவளாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் இனி இவளைப் புகழ்ந்து பாராட்டுவதைக் காண்பதே எனக்கு உண்மையில் ஆனந்தமாக இருக்குமன்றி, என்னைப் புகழ்வது அவ்வளவாக சந்தோஷம் உண்டாக்காது" என்று நயமாகக் கூறி