பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மாயா விநோதப் பரதேசி நினைத்ததன்றி, வெறுங் கையோடு வரக்கூடாது ஆகையால் சில சாமான்களைச் சேகரம் செய்து கொண்டு வரவேண்டும் என்று நினைத்துத் தங்கள் ஆவலை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றாள். w அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், "சரி, அப்படியானால், உன்னுடைய இஷ்டப்படியே நான் எல்லாக் காரியங்களையும் முடித்துக் கொள்கிறேன். நீயும் என்னோடு கூடவே இரு" என்று கூறி நயந்து வேண்டினாள். உடனே அவர்கள் இருவரும் வாசற் படியண்டை நின்ற வேலைக்காரியோடு ஸ்நான அறைக்குச் சென்றனர். அதன் பிறகு அரை நாழிகை காலத்தில் மனோன்மணி யம்மாள் கந்தசாமியைக் காணாத ஏக்கத்தை ஒரளவு மறந்து இரண்டொரு வாய்ப் போஜனம் உட்கொண்டு தண்ணின் அருந்தினாள். அதற்கு மேல் ஆகாரம் ஏற்கவில்லை ஆதலால், அவ்வளவோடு அவள் நிறுத்திவிட்டு வடிவாம்பாளோடு மறுபடி தனது விடுதிக்கு வந்து சேர்ந்தாள். விருந்தினர் தன்னைப் பார்க்க வரும் போது தான் தனிமையில் இருப்பதைவிட வடிவாம்பாளும் தன்னோடு இருப்பது நல்லதென்று மனோன்மணியம்மாள் எண்ணினாள். அதுவுமன்றி, தன்னிடம் அமிர்தம் போல நிரம்பவும் இதமாக நடந்து கொண்ட அந்தப் பெண்மணி எப்போதும் தன்னோடு கூடவே இருந்தால், தனது கொடிய விரக வேதனையில் அது ஒர் ஆறுதலாக இருக்கும் என்றும் அவள் நினைத்தாள் ஆதலால், தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று அவள் வடிவாம்பாளிடம் கேட்டுக் கொள்ள, பின்னவள் நிரம்பவும் சந்தோஷத்தோடு அந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவளோடு கூடவே இருந்தாள். அன்று மத்தியானம் திரிபுரசுந்தரி யம்மாள், எல்லோரும் வர ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்று செய்தி சொல்லியனுப்ப, அவர்கள் வரலாம் என்று வடிவாம்பாள் மறுமொழி கூறியனுப்பி விட்டு, அவ்விடத்தில் இரண்டு மூன்று பிரம்புப் பாய்களைப் பரப்பிவிட்டு அதன்மேல் மனோன்மணியம் மாளோடு வீற்றிருந்தாள். ஐந்து நிமிஷ நேரத்தில் சுமார் இருபது ஸ்திரீகளும் திரிபுரசுந்தரியம்மாளும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். விருந்தினர் எல்லோரும் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சீமாட்டிகள் போலவே காணப்பட்டனர். ஒவ்வொருவரும் சுமார்