பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187 வந்து சேரும். கொஞ்சம் பொறுத்துக்கொள். அழாதே அம்மா! முதல் நாள் பூஜை முடிந்தவுடனேயே கடவுள் நல்ல குறியைக் காண்பித்திருக்கிறார். வெகு சீக்கிரத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இவ்வளவு தூரம் நம் எல்லோரையும் கூட்டி வைத்த கடவுள் முடிவில் நம்மைப் பிரித்துவிட மாட்டார். விசனப்படாதே தங்கமே!" என்று கூறினாள். அவள் பேசிய மாதிரி புண்ணில் தேவாமிருதத்தைச் சொரிவதுபோலத் தோன்றியது. ஆகவே மனோன்மணியம்மாள் ஒருவித ஊக்கமும், ஆறுதலும், மனோ திடமும் அடைந்தவளாய் எவ்வித மறுமொழியும் கூறாமல், வடிவாம்பாளை ஆசையோடு கட்டி அனைத்தபடி இருந்தாள். உடனே வடிவாம்பாள் பேசத் தொடங்கி, "அம்மா மனோன் மணி எங்களுக்கெல்லாம் எதிரிகளால் கெடுதல் நடந்து விட்டதாக சமாசாரப் பத்திரிகைகளில் சங்கதி வெளியாயிற்றல்லவா. அதைப் பார்த்து விட்டு என் தகப்பன்மாரும், தாயாரும், இன்னும் எங்கள் உறவினர்களான பெரிய பெரிய மிராசுதார்களும், கோடீஸ்வரர் களும் சுமார் நாற்பத்தைந்து பேர் வந்திருக்கிறார்கள். மத்தியானம் அவர்கள் இங்கே வந்து உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் போது நீ இப்படி இருப்பது பரிகாசத்திற்கு இடமாகும். ஆகையால், நீ எழுந்து நன்றாக ஸ்நானம் செய்து நெற்றிக்கு விபூதி, பொட்டு முதலியவைகள் அணிந்து கொண்டு பார்ப்பதற்கு லட்சணமாக இருக்க வேண்டும். எழுந்திரம்மா, உன் உடம்பு இளைத்துப் போய் பலவீனப்பட்டிருக்கிறது. நான் கூடவே இருந்து எல்லாக் காரியங்களையும் செய்விக்கிறேன்" என்று கூறினாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு, "ஆ! அப்படியா அத்தனை ஜனங்கள் வந்திருக்கிறார்களா அவர்கள் அவசியம் என்னைப் பார்க்க வருவார்களா!" என்று கூறிய வண்ணம் சுறுசுறுப்பாக எழுந்து உட்கார்ந்து கொண்டாள். உடனே வடிவாம்பாள், "ஆம் அம்மா! அவர்கள் உன்னைப் பார்க்க எவ்வளவு ஆசையும் ஆவலும் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் வந்தவுடனே முதலில் உன்னைப் பார்க்கவே ஆசைப்பட்டார்கள். மத்தியானம் தான் நல்ல வேளை என்று