பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #99 மனிதரால் பரிகாரம் செய்ய முடியாத பெரிய துன்பத்தை நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். அதற்குக் கடவுளே வழி செய்ய வேண்டும். அவரையும் நீஅசட்டை செய்தால், பிறகு நாம் உய்யும் மார்க்கந்தான் என்ன? கடவுளுக்கு நீ உன் கடமையைச் செலுத்தப் போகும் இடத்தில், உன் பிராணன் போகும் என்று நான் நினைக்கவே இல்லை. அப்படிப் போகுமானால், இங்கே பிராணன் போவதைவிட, அங்கே போவதை நீ ஒரு பெருத்த பாக்கி யமாக மதிக்க வேண்டுமேயன்றி வேறல்ல. ஆகையால், இருந்த படி இருக்கட்டும் என்று, நீ மனோதிடத்தைக் கைவிடாமல் புறப் படு. இவ்வளவு பரிதாபகரமான நிலைமையில் நீ அங்கே வந்து வணங்குவதைக் கண்டு கூடவா, கடவுள் இரங்க மாட்டார்: மெது வாக எழுந்திரம்மா. உன்னை நானும் வேலைக்காரியும் கெட்டி யாய்ப் பிடித்துக் கொள்ளுகிறோம். மெதுவாக எழுந்து வா" என்றாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் அதை மறுக்கமாட்டாத வளாய்த் தட்டுத் தடுமாறி மெதுவாக எழுந்தாள். வடிவாம்பாள் வேலைக்காரியையும் உதவிக்கு அழைத்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் மனோன்மணியம்மாளுக்குக் கைலாகு கொடுத்து அவளைக் கெட்டியாய்ப் பிடித்துத் துக்கியபடி நடத்தி அழைத்துக் கொண்டு போய் அவளுக்குத் தேகசுத்தி செய்வித்து ஆடைகளை மாற்றி நெற்றியை விபூதி பொட்டு முதலியவற்றால் அலங்கரித்து அவ்விடத்திலிருந்து பூஜை நடக்கும் மண்டபத்திற்கு அழைத்துப் போயினர். அந்த இடம் தத்ரூபம் சர்வேசுவரன் உயிரோடு சான்னித்யம் செய்யும் கைலாசம் போலக் கண்கொள்ளாத் தேஜோ மயமாய் விளங்கிக் காண்போர் தம்மை மறந்து பரவசமடைந்து ஆனந்த நிர்த்தனம் புரியச் செய்வதாய்க் காணப்பட்டது. சுவாமியின் பூஜைப்பெட்டி முற்றிலும் ரோஜாப் புஷ்பங்களால் ஆன புஷ்பக விமானத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும், குன்று குன்றாய்ப் புஷ்பக் குவியலும், வில்வ தளங்களின் குவியலும், வண்டிக் கணக்கில் புஷ்ப ஹாரங்களுமே மயமாய் நிறைந்திருந்தன. ஏராளமான நெய்விளக்குகளும், ஊதுவர்த்தி களும், கனி வர்க்கங்களும், மகா நைவேத்தியங்களும் எங்கும்