பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மாயா விநோதப் பரதேசி மயமாக நிறைந்திருந்தன. எண்ணிறந்த ருத்திராகூ மாலைகள், விபூதி, நார்மடி வேஷ்டிகள் முதலிய அலங்காரங்களோடு பூசைப் பெட்டிக்கு அருகில் கற்பூரத்தட்டும் கையுமாக நின்ற வேலாயுதம் பிள்ளை, கடவுளின் பிரதி பிம்பம் போலவும், கடவுள், மனிதன், கடவுளினிடம் மனிதன் காட்டவேண்டிய பக்தி ஆகிய, பதி, பசு, பாசம் என்ற தன்மை இப்படிப்பட்டது என்று உலகத்தாருக்கு நிதரிசனமாய்க் காட்டுகிறவர் போலவும், ஒரே பக்தி வடிவாயும், தூய்மையே மயமாயும் நின்றார். கண்ணப்பா, திரிபுரசுந்தரி யம்மாள், பட்டாபிராம பிள்ளை, சுந்தரம் பிள்ளை முதலியோரும் இன்னும் மன்னார் குடியிலிருந்து வந்திருந்த ஆண் பெண்பாலரான விருந்தினர்களும் நீராடி, £&if பரிசுத்தமான உடைகளனிந்து, விபூதி தரித்து, அஞ்சலி யஸ்தராய், "ஹர ஹர மகாதேவா" என்று சொல்லிக் கடவுளை ஸ்தோத்திரம் செய்தபடி ஒரு பக்கத்தில் நின்றனர். அவர்களைத் தவிர, தான தருமங்கள் பெற வந்த ஏராளமான ஸ்திரீ புருஷர்களும் கும்பிட்டதையும், ஸ்தோத்திரம் செய்த வாயுமாய் அந்த மண்டபத்திற் கெதிரில் நின்றனர். அந்தச் சமயத்தில், முற்றிலும் துவண்டு தனது கண்களை மூடிய வண்ணம் தங்கக் கம்பி போல வளைந்து வளைந்து தட்டித் தடுமாறி அடிமேல் அடிவைத்து நடந்து வந்த மனோன்மணியம்மாளை வடிவாம்பாள் முதலிய ஸ்திரீகள் தாங்கி அவள் கீழே விழுந்து விடாமல் வலுவாகப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கத்தில் மறைவாக நின்றனர். அவ்வாறு மகா பரிதாபகரமான நிலைமையில் நின்று கொண்டிருந்த மணப் பெண்ணைக் காண அங்கிருந்தோர் அனைவரும் மனநைந்து கண்ணிர் விடுத்து, அந்த மடந்தை கூேடிமப்பட வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கத் தொடங்கினர். அந்தச் சமயத்தில் வேலாயுதம் பிள்ளை நிரம்பவும் உருக்கமான பல பதிகங்களைப் பாடிய வண்ணம் கற்பூரத்தைக் கொளுத்தி ஆரத்தி எடுத்து சுவாமிக்கெதிரில் காட்டிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கெதிரே இருந்த கும்பலில், "ஹ ஹூ!" என்ற ஒரு பெருத்த கூக்குரல் உண்டாயிற்று. எல்லோரும் திடுக்கிட்டு அந்த ஒசை உண்டான இடத்தைப் பார்த்தனர். பரதேசிக் கும்பலிற்குப்