பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மாயாவிநோதப் பரதேதி மாள் முற்றிலும் சோர்ந்து தளர்ந்து கண்மூடிக் கட்டிலில் சாய்ந்து விட்டமையால், வடிவாம்பாள் கூறியதை அந்த மடந்தை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அவள்களை தீர்ந்து விழிக்கட்டும் என்று வடிவாம்பாள் அவளுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள். கால் நாழிகை காலம் சென்றது; ஒரு வேலைக் காரி, "அம்மா அம்மா" என்று கூப்பிட்டுக் கொண்டு விரைவாக உள்ளே ஓடிவந்து, தபால்காரன் இதைக் கொடுத்து விட்டுப் போகிறான். இது மனோன்மணியம்மாளுக்கு வந்திருக்கிறது. இதைப் பிரித்துப் படிக்கச் சொல்லுங்கள்" என்று ஒரு வஸ்துவை வடிவாம்பாளிடம் கொடுத்தாள். அவள் சொன்னதைக் கேட்டு வடிவாம்பாள் திடுக்கிட்டு, அவள் கொடுத்ததை வாங்கி அது என்ன வென்று உற்று நோக்கினாள். ஒன்றரைச் சாண் நீள அகலத்தில் கெட்டியான அட்டை போலக் காணப்பட்ட ஒரு வஸ்து காகிதத்தினால் மூடப்பட்டு மேலே பட்டுக் கயிற்றினால் கட்டப் பட்டிருந்தது. அதற்கு மேல் தபால் தலைகளும், முத்திரையும் மனோன்மணியம்மாளது மேல் விலாசமும் காணப்பட்டன. அதைக் கண்டு கட்டிலடங்கா ஆவலும் பதைப்பும் கொண்ட வடிவாம்பாள் மனோன்மணியண்டை போய் மெதுவாய் அவளைத் தொட்டு அசைத்து, "அம்மா மனோன்மணி மனோன் மணி தபாலில் என்னவோ வந்திருக்கிறது. தெய்வம் வந்து குறி சொன்ன காலத்தில் உனக்கு இன்றைய தினமே நல்ல செய்தி கிடைக்கப் போகிறதென்றதல்லவா. அதுதான் வந்திருக்க வேண் டும். எழுந்து இதைப் பிரித்துப் பார்" என்றாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் திடுக்கிட்டுத் தனது கண்களைப் பளிச்சென்று திறந்து கொண்டு விரைவாக எழுந்து உட்கார்ந்து அந்தத் தபாலை வாங்கி, மேலே இருந்த கயிற்றுக் கட்டையும், காகித உறையையும் விலக்கி விட்டு அட்டை போல இருந்த வஸ்துவை வெளியில் எடுத்துப் பார்த்தாள். ஆகா! என்ன ஆச்சரியம்! கந்தசாமி பெண் வேஷந் தரித்து அவளிடம் வந்த காலத்தில் எப்படி இருந்தானோ, அதே கோலத்தோடு எடுக்கப் பட்ட ஒரு போட்டோகிராப் படம் அந்த அட்டையில் காணப் பட்டது. அதன் அடியில், "க்ஷேமமாய் இருக்கிறேன். நான்கு