பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 205 தினங்களில் வருகிறேன். கவலை கொள்ள வேண்டாம்" என்ற எழுத்துக்கள் இங்கிலீஷில் டைப் அடிக்கப்பட்டிருந்தன. அதையும் மனோன்மணியம்மாள் படித்தாள். தனது ஆருயிர் மணாளன் அதற்குப் பதினைந்து தினங்களுக்கு முன் சென்ற சனிக்கிழமை அன்று எப்படி பெண் வேஷந்தரித்து அப்ஸ்ர ஸ்திரீபோலத் தனக் கெதிரில் வந்து நின்றானோ, அதே வடிவம், தன் கண் முன் இருப்பதைப் போலக் காணப்பட்டது. மனோன்மணியம்மாள் ஆனந்த வெறி கொண்டு தன்னை மறந்து, "ஆகா! என் பிராணபதி: என் உயிரைக் கொள்ளை கொண்டு போன தெய்வமே! இந்த ஏழையின் மேல் உங்களுக்கு இப்போதாவது தயவு பிறந்ததா! ஆகா! என் பாக்கியமே பாக்கியம்' என்று வாய்விட்டுப் பலவாறு பிதற்றிய வண்ணம் அந்தப் படத்தில் காணப்பட்ட பெண் வடிவத்தை ஆசையோடு அப்படியே தனது கண்களில் ஒற்றிக் கொண்டாள். ★ 女 ★ 15-வது அதிகாரம் பதினையாயிரம் ரூபாய் பரிசு சென்னையில் உள்ள பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளைக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதி, அதை நீலலோசனியம் மாளிடம் கொடுத்தனுப்பிய பிறகு நமது மாசிலாமணி நிரம்பவும் குதுகலமாகவே இருந்து வந்தான். நீலலோசனியம்மாளது ஐந்து லட்சம் ரூபாய் எப்படியும் தனக்கு வந்து சேரும்படி தனது பாரிஸ்டர் செய்து விடுவார் என்ற நிச்சயம் அவனது மனதில் உண்டானது ஆகையால், தான் எதிர்பாரா வகையில் தனக்கு நேர்ந்துள்ள அந்த அபாரமான அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி, அவன் பேருவகை பூத்து ஆனந்தக் கடலில் மிதந்து அல்லும் பகலும் அதே சிந்தனையாய் இருந்து வந்தான். அந்த ஐந்து லட்சம் ரூபாயும் ரமாமணியம்மாளுக்கு இல்லாமல் போனதைக் குறித்து, அவள் அளவற்ற ஏமாற்றமும், விசனமும், ஆத்திரமும் அடைவது நிச்சயமாகத் தோன்றியது. அதுவுமன்றி அந்த விஷயத்தில் தான் அவளுக்கு விரோதியாய்த் தோன்றி, அந்தத் தொகையை அபகரித்துக் கொள்வதைப் பற்றி அவள் தன் மீது பெருத்த