பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - மாயா விநோதப் பரதேசி பகைமையும் குரோதமும் கொண்டு தன்னால் இயன்ற வரை ஏதேனும் கெடுதல் செய்ய எத்தனிப்பாள் என்பதும் நிச்சயமாகப் பட்டது. ஆகவே, தனது ரகசியங்களில் எதெது ரமாமணியம் மாளுக்குத் தெரிந்திருக்கிற தென்பதைப் பற்றியும், அதை வெளியிடுவதால் தனக்கு எவ்விதமான தீங்கு நேரிடும் என்பதைப் பற்றியும், மாசிலாமணி ஆழ்ந்து யோசனை செய்தான். தான் வேலாயுதம் பிள்ளை முதலியோரை அங்கஹlனப்படுத்த எண்ணி, இடும்பன் சேர்வைகாரனையும் ஆட்களையும் அனுப்பிய விஷயத்தை அவள் போலீசாரிடம் வெளியிடக் கூடுமாயினும், அவள் அப்படிச் செய்யாமல் வேறுவிதமாய் வாக்கு மூலம் கொடுத்து விட்டமையால், மறுபடி அவள் அதை மாற்றிக் கூறுவது பயன்படாதென்றும், ஆகவே அந்த விஷயத்தைக் குறித்துத் தான் எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை என்று அவன் முடிவு செய்து கொண்டான். அந்த விஷயத்தைத் தவிர இன்னம் முக்கியமான வேறொரு விஷயம் அவளுக்குத் தெரிந்திருந்ததானாலும், அந்த விஷயத்தில் அவளும் சம்பந்தப் பட்டிருந்தமையால், அதை அவள் வெளியிடமாட்டாள் என்று எண்ணினான். மேற்குறித்த இரண்டு ரகசியங்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்குத் தெரியாதாகையால், அவளைப் பற்றித் தான் அஞ்சவே வேண்டியதில்லை என்று அவன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான். முக்கியமாகத் தனது ரகசியங்கள் யாவும் ஒன்று பாக்கியில்லாமல் இடும்பன் சேர்வைகாரனுக்கு மாத் திரம் தெரியும் ஆதலால், தான் எப்பாடுபட்டாயினும், அவனைக் காப்பாற்றி அவனிடம் எப்போதும் போல நட்பாகவே இருந்து விட்டால், தனக்கு எவ்வித கெடுதலும் நேராதென்றும், நீல லோசனியம்மாள் போலீசாரின் கண்ணில் படாமலே இருப்பாள் ஆதலால், சேர்வை காரன் எப்படியும் விடுதலை பெற்று வந்து சேர்ந்து விடுவான் என்றும் மாசிலாமணி எண்ணிக் கொண்டிருந் தான். தானும், இடும்பன் சேர்வைகாரனும் சேர்ந்து செய்த சதியாலோசனைகளில் மனோன்மணியம்மாள்ை அபகரித்துவர எத்தனித்ததும், வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளிப்படுத்த முயன்றதும் பலியாமல் தாறுமாறாகப் போயின. ஆனாலும், சட்டைநாத பிள்ளையை விடுவித்தது, திகம்பரசாமியாரைக்