பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O7 கொன்றது ஆகிய இரண்டு பிரதான விஷயங்களிலும் தமக்கு வெற்றி ஏற்பட்டதை நினைத்து நினைத்து மாசிலாமணி எல்லை யற்ற களிப்படைந்து இரண்டு பெருத்த ராஜ்யங்களுக்கு முடி சூட்டப் பெற்றவன் போல மெய்ம்மறந்து பேரின் பத்தில் தோய்ந்திருந்தான். தனது உயிர் மாத்திரம் இருக்குமாயின், தனது ஆயுள் காலத்திற்குள் வேலாயுதம் பிள்ளை முதலியோரின் விஷயத்தில் தான் எப்படியும் பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்ததன்றி, சென்னையில் இருந்து இடும்பன் சேர்வை காரன் வந்து விடும் பட்சத்தில், தான் அவனுடன் கலந்து யோசனை செய்து, வேறு எவ்விதமாவது தனது பகைவர்களின் கருவை அறுத்தே தீரவேண்டும் என்று அவன் உறுதியாக எண்ணி இருந்தான். அவ்வாறு மாசிலாமணி பலவித எண்ணங்களையும் இன்பகர மான யோசனைகளையும் செய்து மனக்கோட்டை கட்டியபடி சென்னையில் இருந்து நீலலோசனியம்மாளினது வருகையையும் இடும்பன் சேர்வைகாரனது வருகையையும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துத் துடிதுடித்திருக்க, புதன்கிழமையும் வியாழக்கிழமை யும் கழிந்தன. வெள்ளிக்கிழமை பகலில் அவன் தனது ஸ்நானம் போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு, தனது சோபா வைத்த ஊஞ்சலில் உல்லாசமாகச் சாய்ந்து ஆடிய வண்ணம், தனது மானசீகப் பொன் கோட்டையை மேன்மேலும் அழகு படுத்திக் கட்டிக் கொண்டே இருந்த சமயத்தில், "எஜமானே! நமஸ்காரம் வருகிறது" என்ற கனத்த ஒரு குரல் உண்டாயிற்று. அது மாசிலாமணிக்கு நிரம்பவும் பழக்கமான குரலாக இருந்தது. அவன் திடுக்கிட்டு நிமிர்ந்து வாசற்படியண்டை பார்க்க, கும்பிட்ட கையும் சிரித்த முகமுமாய் நமது இடும்பன் சேர்வைகாரன் பிரசன்ன மானான். அவனைக் கண்ட மாசிலாமணி மனத்திலடங்காப் பெருங் களிப்பும் சகிக்க ஒண்ணாக் குதுகலமும் அடைந்து துள்ளிக் குதித்துப் பேராநந்தத்தினால் மலர்ந்த முகத்தினனாய், "வாரும், வாரும் சேர்வைகாரரே! இப்போது தான் உம்மைப் பற்றி நினைத் தேன்; உமக்கு நூறாயிசு இப்படி வந்து நாற்காலியின் மேல் குந்தும்" என்று மனமார்ந்த அன்போடும் மரியாதையோடும் உப சரிக்க அவன், "உட்காருகிறேன்" என்று மறுமொழி கூறிய வண்ணம்,