பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மாயா விநோதப் பரதேசி ஊஞ்சலிற்கருகில் இருந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டான். உடனே மாசிலாமணி, "பட்டணத்திலிருந்து எப்போது வந்தீர்? நேராய் அங்கிருந்து தான் வந்தீரா? அந்த நீலலோசனியம்மாளை மறுபடியும் நீர் கண்டீரா? போலீசார் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ளும்படி நான் ஏற்பாடு செய்திருந்தேன். ஒர் அவசரகாரிய மாய் அந்த அம்மாள் இங்கிருந்து மறுபடி பட்டணம் வர நேர்ந்தது. அவ்விடத்தில் நீர் ஒருவேளை அந்த அம்மாளைக் கண்டிருப்பிரோ என்று கேட்டேன். உம்முடைய வழக்கின் விசாரணை முடிந்து போய்விட்டதா?" என்றான். உடனே இடும்பன் சேர்வைகாரன், "அந்த அம்மாளை நான் அதற்குப் பிறகு பார்க்கவில்லை. அந்த அம்மாள் போலீசார் கண்ணிலும் படவில்லை. நேற்றைய தினம் மாஜிஸ்டிரேட் சப்ஜெயிலைத் தணிக்கை செய்வதற்காக வந்தார். என்னைப் போலீசார் அக்கிரமமாக அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும், என் வழக்கில் சாட்சி யாரும் இல்லை ஆகையால், அவர்கள் பொய் சாட்சி தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் கேட்டுக் கொண்டேன். அவர் உடனே போலிஸ் இன்ஸ் பெக்டரைத் தருவித்து என்னைத் தம்முடைய கச்சேரிக்கு அழைத்து வரச் செய்து என் வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான நீலலோசனியம்மாள் எங்கும் காணப்படவில்லை என்றும், அவள் அகப்படுகிற வரையில் என்னைச் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் போலீசார் சொன்னார்கள். மாஜிஸ்டிரேட் அதை ஏற்றுக் கொள்ளாமல், நான் குற்றவாளி என்பதற்கு சரியான ருஜூவில்லை என்று அபிப் பிராயப்பட்டு என்னை விடுதலை செய்துவிட்டார். நான் நேற்று இரவு வண்டியில் ஏறி இன்று காலையில் இங்கே வந்தேன். வந்து என் வீட்டிற்குப் போய்ப் பெண்ஜாதி பிள்ளைகளை எல்லாம் பார்த்துவிட்டு ஸ்நானம் சாப்பாடு முதலியவற்றை முடித்துக் கொண்டேன். நேற்று இரவில் தூக்கமே இல்லை; சாப்பிட்டவுடன் துக்கம் வந்தது. ஆனாலும் உடனே வந்து எஜமானைப் பார்க்க வேண்டும் என்று என் துகத்தை அடக்கிக் கொண்டு புறப்பட்டு வந்தேன். உடனே உன்னைப் பார்க்க வேண்டும் என்ற பிரியம் ஒரு பக்கத்தில் இருந்ததானாலும், அந்தக் கந்தசாமியைத் தாங்க்ள்