பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 என்ன செய்தீர்கள் என்பதைக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் என் துக்கம் எல்லாம் பறந்து போய் விட்டது. அந்த விஷயத்தை முதலில் சொல்லுங்கள். போன செவ்வாய்க்கு முந்திய செவ்வாய் அன்று நீங்கள் சோபன முகூர்த்தம் ஏற்படுத்தி இருந்தீர்களே. அன்றைய இரவில் என்ன நடந்தது? ஆண் பிள்ளையே அப்படிப் பெண் வேஷத்தோடு வந்திருப்பதாக நீங்கள் எப்போது கண்டு கொண்டீர்கள்? அவன் நம்முடைய பகைவனான கந்தசாமி என்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்களா இல்லையா? தெரிந்து கொண்டிருந்தால், நீங்கள் அவனை இரண்டு துண்டாய் வெட்டி பூமிக்குள் புதைத்து விட்டீர்களா இல்லையா? ஆகா! பட்டணத்தி லிருந்து அவனை மோட்டாரில் எடுத்து வந்த காலத்தில் அவன் கந்தசாமி என்பது தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால், அவனை நானே கண்டதுண்டமாய் வெட்டி நடுவழியில் நாய் நரி களுக்கு விருந்தாய்ப் போட்டுவிட்டு வந்திருப்பேன். அந்தப் பெருமை எனக்கு இல்லாமல் போய்விட்டது. போனாலும் போகட்டும்; நீங்கள் அவனை என்ன செய்தீர்கள்? அவன் இன்ன மும் இந்த உலகத்தில் இருக்கிறானா அல்லது அடுத்த உலகத்தில் இருக்கிறானா? அதை முதலில் சொல்லுங்கள்" என்றான். உடனே மாசிலாமணி நிரம்பவும் அதிருப்தியும் அருவருப்பும் காட்டி, "அவன் கடைசி வரையில் பெண் போலவே நடித்து மகா சாமர்த்தியமாகப் பேசி, என்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான் ஐயா, அவன் கந்தசாமி என்பது மாத்திரம் தெரிந்திருந்தால், நான் அவனை உயிரோடு விட்டிருப்பேன் என்று நினைக்கிறீரா? பூத்தொட்டியை எடுத்து ஒரே அடியாய் அவனுடைய மண்டையில் அடித்து அவனை மாளச் செய்து ரகசியமாய்க் கொண்டு போய்க் காவிரியாற்று வெள்ளித்தில் எறிந்துவிட்டு வந்திருப்பேன். அவன் சொன்ன கட்டுக்கதையை நம்பி சோபன முகூர்த்தத்தை மறுநாள் வைத்துக் கொள்வதற்கு நான் இணங்கி, அவனை முன்னிருந்த அறைக்கு அனுப்பிவிட்டு, நான் போய்ப் படுத்துத் துங்கிவிட்டேன். இரவு சுமார் 12-மணிக்கு அவன் எழுந்து எவரும் காணாதபடி வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய்விட்டான் போலிருக்கிறது. மறுநாட் காலையில் தான் அந்தச் சங்கதி எனக்குத் தெரிந்த்து. அவன் எங்கே போனான் Inn.o.L.HH-14