பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மாயா விநோதப் பரதேசி என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்டது. இதை நம்முடைய துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்" என்று மிகுந்த விசனத்தோடு கூறினான். உடனே இடும்பன் சேர்வைகாரன், "அவன் பெண் வேஷத்துட னேயே போனானா? அவன் போன பின் அவனுடைய உடம்பில் இருந்த புடவை ரவிக்கை நகைகள் எல்லாம் இங்கே இருந்தனவா?" என்றான். மாசிலாமணி, "செவ்வாய்க்கிழமை இரவில் அவன் அணிந் திருந்த நகைகளையும் புடவை ரவிக்கைகளையும் அவன் இங்கே வைத்து விட்டுப் போகவில்லை; இங்கே இருந்து வெள்ளை வேஷ்டி எதையும் எடுத்துக் கொண்டும் போகவில்லை. ஆகையால், அநேகமாய் அவன் பெண் வேஷத்தோடு தான் போயிருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டியிருக்கிறது. வெளியில் போன பிறகு அவன் எங்கேயாவது போய் வேஷங் கலைத்து விட்டுப் போனானோ, அல்லது, பெண் வேஷத்துட னேயே போனானோ, அதைத் தான் நிச்சயிக்க முடியவில்லை. அவன் உயிர் தப்பிப் போனதுமன்றி சுமார் லட்சம் ரூபாய் பெறத் தக்க வைர நகைகளோடு அவன் இவ்விடத்திலிருந்து போய் விட்டான். குதிரை தூக்கிப் போட்டதுமன்றி குழியும் தோண்டிய தென்பார்கள். அது போல இருக்கிறது அவன் செய்த காரியம்" என்றான். அவன் அவ்வாறு சொல்லி வாய் மூடுமுன் எதிர்பக்கத்திலிருந்த கதவிற்கு அப்பால் இருந்து, "ஆகா அப்படியா மகா சாமர்த்திய சாலியாகிய நீர்கூடவா அப்படி ஏமாறிப் போனிர்? எங்களுக் கெல்லாம் இது நிரம்பவும் அவமானமாக அல்லவா இருக்கிறது?" என்ற ஒரு குரல் கேட்டது. மாசிலாமணி திடுக்கிட்டுத் கதவுப்பக்கம் திரும்பிப் பார்த்தான். தாங்கள் பேசியதை யாரோ ஒளிந்து கேட்டு விட்டார்களே என்ற கோபத்தினால், அவனது கண்கள் நெருப்புத் தணல் போலச் சிவந்துபோயின. "யாரடா அங்கே ஒளிந்திருப் பவன்?" என்று மாசிலாமணி அதட்டிக் கேட்க, "ஒளிந்திருக்க வில்லை, இப்போது தான் வந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறிய வண்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாவையங்கார்