பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21i உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் ஆயுதபாணிகளாய் நான்கு ஜெவான்களும் வந்தனர். அவர்களைக் காண, மாசிலாமணி திடுக்கிட்டுப் போனான். அவனது முகம் உடனே வாட்டமடைய, மிகுந்த கோபம் பொங்கி எழுந்தது. இடும்பன் சேர்வைகாரன் போலீசாரைக் கண்டு மிகுந்த கிலேசம் அடைந்தவனாய்க் காணப் பட்டான். இருவரும் உடனே தங்களது ஆசனங்களை விட்டுக் கீழே இறங்கினர். எதற்காகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்போது வந்திருக்கிறாரோ என்ற அச்சமும் கவலையும் மாசிலாமணியின் மனத்திலெழுந்து வதைக்கத் தொடங்கின. ஆனாலும், தான் அந்தரங்கமாக இருந்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில் போலீசார் தனக்கு அறிவிக்காமல் தாராளமாய் உள்ளே வந்ததைப் பற்றி அவன் அடக்க இயலாத ஆத்திரமடைந்தான். அதுவுமன்றி, கந்தச்ாமியின் விஷயத்தில் தான் ஏமாறிப்போனதாக இடும்பன் சேர்வைகாரனிடம் சொன்னதை அவர்கள் கேட்டிருந்து, அது விஷயத்தில் தன்னைக் குத்தியது போல வார்த்தை சொல்லியதைக் கேட்கவே, மாசிலாமணி அதற்கு முன் போலீஸ் அண்ணாவையங் காரிடம் காட்டி வந்த மரியாதையை விட்டு அவரை நோக்கி அலட்சி யமாகப் பேச ஆரம்பித்து, "என்ன சுவாமிகள்! போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியவர்கள் வழிதவறி இங்கே வந்து விட்டீர்களா? அல்லது, போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் இடம் போதவில்லை என்று, இந்த வீட்டையும் உங்கள் ஸ்டேஷனாக உபயோகித்து வருகிறீர்களா? இனி நான் கலியாணம் செய்து கொண்டால் கூட நான் என் பெண்சாதியோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போலிருக்கிறதே, எப்போது பார்த்தாலும் போலீசார் இந்த வீடே கதியாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், அவர்களுக்கு இதைத் தவிர வேறே வேலையே இல்லை போலவும் இருக்கிறது. இத்தனை போலீஸ் உத்தியோ கஸ்தரும், ஜெவான்களும் என் ஒருவன் பொருட்டே நியமிக்கப் பட்டிருப்பதாக அல்லவா தோன்றுகிறது. இந்த இரண்டு வாரத்திற் குள் நீங்கள் எட்டுத் தடவை வந்து இந்த வீட்டைச் சோதனை போட்டுப் பார்த்து விட்டீர்கள்; இன்னம் என்னை விட்ட பாடில்லை. உங்கள் கண்ணிலெல்லாம் படாமல் நான் எந்தக் குற்ற வாளிகளை இங்கே ஒளிய வைத்திருக்கிறேன்? இந்தத் தெருவில்