பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 . மாயா விநோதப் பரதேசி இந்த வீடு இருப்பது போலீசார் கண்ணுக்கு உறுத்தலாக இருந்தால், இதை இடித்தாவது தரைமட்டமாக்கி விடுங்களேன். ஏன் இப்படி அடிக்கடி மூட்டைப்பூச்சிகள் போல மறைந்திருந்து மனிதரைக் கடித்து அவருடைய இரத்தத்தை ஓயாமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" என்றான். . அவன் ஆத்திரமாகவும் அவமரியாதையாகவும் பேசியதைப் பற்றி அண்ணாவையங்கார் கோபங் கொள்ளாதவராய் மாசிலா மணியை நோக்கி சந்தோஷகரமாய் மலர்ந்து புன்னகை செய்த முகத்தோடு சாந்தமாகப் பேசத் தொடங்கி, "ஏது மாசிலாமணிப் பிள்ளைக்கு இன்று அசாத்தியமான கோபம் வருகிறது! உமக்கு நான் இன்று ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கேட்டு நீர் சந்தோஷமடைய வேண்டியதை விட்டு இப்படிக் கசந்து பேசுகிறீரே! நீர் கலியானம் செய்து கொள்ளாத பிரம்மசாரி என்பது எனக்குத் தெரியாதா? நீர் கலியாணம் செய்து கொண்ட குடும்பஸ்தராய் இருந்தால், நான் இப்படி திடீரென்று உள்ளே வருவேனா? நீர் என்னுடைய நண்பர் என்ற உரிமை பாராட்டி நான் வந்துவிட்டேன். நீர் யாரோ ஆண்பிள்ளையோடு தானே பேசிக் கொண்டிருந்தீர். ஆனாலும் இது உமக்கு அசந்தர்ப்ப வேளையாய் இருந்தால் நான் வெளியில் போய் உம்முடைய ஆள்வசம் சொல்லி அனுப்புகிறேன். உம்முடைய அனுமதி கிடைத்த பிறகு மறுபடி வருகிறேன்" என்றார். அதைக் கேட்ட மாசிலாமணி, "போலீசார் கூட மனிதருக்கு நல்ல சங்கதி சொல்வதுண்டா? தூமகேது என்ற நட்சத்திரம் தோன்றினால், அது உலகத்திற்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதைக் காட்டும் குறி என்பார்கள். அது போல, போலீசார் வந்தால், அந்த மனிதனுக்கு ஏதோ அபாயம் நேரப் போகிறது என்பதைக் காட்டும் அறிகுறியல்லவா அது. ஆனால், நீங்கள் என்னை உங்களுடைய நண்பன் என்ற பதவிக்கு உயர்த்தி இருக்கிறபடியால் ஒருவேளை உண்மையிலேயே நீங்கள் ஏதாவது எனக்கு நன்மை செய்ய வந்திருக்கலாம். எப்படியாவது இருக்கட்டும்; விஷயத்தைச் சொல்லுங்கள்" என்றான். அண்ணாவையங்கார், "முன் தடவைகளில் நான் வந்து உம்முடைய தமயனார் சட்டைநாத பிள்ளை இந்த வீட்டில்