பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மாயாவிநோதப் பரதேசி தயாராய் வைத்திருக்கிறேன். திங்கட்கிழமை தானே விசாரணை? நான் அன்றைய தினம் தஞ்சாவூர் ஜட்ஜி கச்சேரிக்கு அவசியம் வந்து சேருகிறேன்" என்று துடியாகக் கூறினான். அண்ணாவையங்கார், "அந்த உத்தரவில் இன்னொரு சங்கதியும் இருக்கிறது. இதுவரையில் கிடைத்த சாட்சியத்தின்படி, உம்முடைய தமயனாரை விடுவித்த விஷயத்திலும், அவரை ஒளிய வைத்திருந்ததிலும் நீரும் சம்பந்தப்பட்டிருப்பதாக ருஜூ அகப்பட்டிருக்கிறதாம். ஆகையால், உம்மையும் உடனே அழைத்துக் கொண்டு போய்ப் போலிஸ் கண்காணிப்பில் பந்தோ பஸ்தாய் வைத்திருக்கும்படியும், நீர் வக்கீல் முதலியோரை அமர்த்திக் கொள்ள எண்ணினால், அதற்குத் தகுந்த செளகரியங் கள் செய்து கொடுக்கும்படியும், நீர் உம்முடைய சொத்துகளோடு வீட்டைப் பூட்டி முத்திரை வைத்து திறவுகோலை உம்மிடமே வைத்துக் கொண்டிருக்கச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வந்திருக்கிறது" என்று நயமாகக் கூறினார். அதைக் கேட்ட மாசிலாமணி திடுக்கிட்டான். அவனது முகம் மாறிப் போயிற்று. அவன் அண்ணாவையங்காரை நோக்கி, "இப்போது கடைசியாக என் நண்பர் சொன்னதுகூட சந்தோஷச் செய்தியில் சேர்ந்ததுதானோ?" என்று ஆத்திரமாகவும் குத்தலாக வும் கூறினான். அண்ணாவையங்கார், "நீர் இந்த விஷயத்தில் கொஞ்சமும் சம்பந்தப்பட்டதே இல்லை என்று என்னிடம் எத்தனையோ தடவைகளில் சொல்லிப் பிரமாணம் செய்திருக்கிறீர். இந்த விசாரணையின் முடிவில் நீர் எவ்வித களங்கமும் இல்லாத யோக்கியர் என்ற பெயருடன் வெளியில் வரப் போகிறீர் அல்லவா? அதைவிட சந்தோஷகரமான செய்தியும் வேறே உண்டா?" என்றார். - அதைக் கேட்ட மாசிலாமணி, "ஒகோ.சரி, வாஸ்தவந்தான். இப் போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?" என்றான். - .