பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215 அண்ணாவையங்கார், "வேறொன்றுமில்லை. நீர் வெகுமதி கொடுப்பதாகச் சொன்னபடி ரூபாய் பதினாயிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தவிர உம்முடைய அண்ணன் நீர் ஆகிய இருவருக்கும் வக்கீல் வைத்து வாதாட வேண்டியதற்கு ஏதாவது தொகை வேண்டும் என்று நீர் நினைத்தால், அதையும் எடுத்துக் கொள்ளும், உம்முடைய வேலைக்காரர்களை நீர் இரண்டொரு தினங்கள் வேறே எங்கேயாவது இருக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டி, முத்திரை வைத்து திறவுகோலை உம்மிடமே பத்திரமாக வைத்துக் கொள்ளும். எங்களோடு கூட நீர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உம்முடைய சொந்த வீட்டில் இருப்பது போல அங்கே இரும். உமக்கு வேண்டிய செளகரியங்களை எல்லாம் நாங்கள் செய்து கொடுக்கிறோம். வக்கீல் யாரையாவது அமர்த்தி அவரை வருவித்துப் பேச உத்தேசித்தால் அதற்குத் தேவையான உதவி களையும் செய்கிறோம்; ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் புறப் பட்டுத் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்து, திங்கட்கிழமை விசா ரணைக்கு ஆஜராக வேண்டும். அவ்வளவுதான் செய்தி. அதிகம் ஒன்றுமில்லை" என்றார். அதைக் கேட்ட மாசிலாமணி இன்னது செய்வதென்பதை அறியாதவனாய்ச் சிறிது நேரம் கலங்கித் தவித்த பின், "சரி, நீங்கள் சொன்னபடியே செய்யலாம். பட்டணத்திலிருக்கும் பாரிஸ்டர் சிவ சிதம்பரம் பிள்ளைக்கு உடனே அவசர தந்தியொன்று கொடுத்து அவர் நாளைய தினமே இங்கே வரும்படி செய்ய வேண்டும். நான் உங்கள் ஸ்டேஷனிலேயே இருக்கிறேன். இந்த வீட்டையே நீங்கள் போலீஸ் ஸ்டேஷனாக மாற்றி இருக்கும் போது, நான் இங்கே இருந்தால் என்ன; அங்கே இருந்தால் என்ன. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. அதிருக்கட்டும், என்னை நீங்கள் இப்போது விலங்கிட்டு அழைத்துக் கொண்டு போக உத்தேசிக்கிறீர்களா என்ன?" என்றான். இன்ஸ்பெக்டர், "இல்லை; இல்லை. உம்முடைய யோக்கியதை எங்களுக்குத் தெரியாதா. நாங்கள் உம்மை அப்படி அவமானப் படுத்த மாட்டோம். வாசலில் வண்டி வந்து தயாராய் நிற்கிறது. நீர்