பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மாயா விநோதப் பரதேசி சாதாரணமாக வந்து அதில் உட்கார்ந்து கொள்வதே போதுமானது. எவருக்கும் தெரியாமல் நாம் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேருவோம்" என்றார். r - அவ்வாறு அவர்கள் சம்பாஷித்திருந்த சமயத்தில் இடும்பன் சேர்வைகாரன் மெதுவாக நழுவி வெளியில் போய் அவ்விடத்தில் நின்ற ஒரு ஜெவானிடம் ஏதோ பேசிய பின் வெளியில் போய் விட்டான். அதன் பிறகு கால் நாழிகை காலம் கழிந்தது. இன்ஸ்பெக்டர் கூறியபடி மாசிலாமணி பணத்தொகையை நோட்டாக எடுத்துக் கொண்டு வேலைக்காரர்களை அனுப்பிவிட்டு வீட்டைப் பூட்டி முத்திரை வைத்து முடித்து ஆயத்தமாக, இன்ஸ்பெக்டர் அவனையும் ஜெவான்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு கால் நாழிகையில் போலீஸ் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தார். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கழிந்தன. கும்பகோ ணத்தில் பிரபல வக்கீலாக இருந்து பத்து வருஷ காலத்திற்கு தண்டனை அடைந்தவரும், சிறைச்சாலையில் இருந்து தந்திரமாகத் தப்பி ஓடிப் போனவருமான சட்டைநாத பிள்ளை மறுபடி அகப்பட்டுக் கொண்டார் என்ற செய்தியும், அந்த வழக்கு திங்கட் கிழமை அன்று தஞ்சாவூர் ஜில்லா ஜட்ஜி கச்சேரியில் பரிசீலனை செய்யப்படப் போகிறதென்ற செய்தியும் காட்டுத் தீ பரவுவது போல வெகு சீக்கிரத்தில் தஞ்சை ஜில்லா முழுதும் பரவிப்போனது ஆகையால், விசாரணை காலத்தில் வேடிக்கை பார்க்கவும், அதன் முடிவைத் தெரிந்து கொள்ளவும் ஆவல் கொண்டு ஜனங்கள் ஆயிரக் கணக்கில் ஜில்லா ஜட்ஜியின் கச்சேரியிலும் அதற்கு வெளியிலும் வந்து காலை ஒன்பது மணி முதலே கூடி நெருங்கி அதைப் பற்றி மிகுந்த வியப்போடு பேசியபடி ஆவலோடு காத்திருந்தனர். சட்டைநாத பிள்ளை எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் தூண்டப்பட்டவர்களாய் நூற்றுக் கணக்கில் வக்கீல்மார்கள் பிரசன்னமாகி கச்சேரி மண்டபம் முழுதையும் அடைத்துக் கொண்டனர். குற்றவாளியின் சார்பாக சென்னையில் இருந்து வந்திருந்த பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை திண்டு தலையணைகள் போலக் காணப்பட்ட ஒரு வண்டி சட்ட