பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217 புஸ்தகங்களைக் கொணர்ந்து படாடோபமாய் எதிரில் பரப்பிவிட்டு முதல் ஆசனத்தில் வெகு ஆடம்பரமாக உட்கார்ந்திருந்தார். சர்க்கார் தரப்பில் அந்த வழக்கை நடத்துவதற்காக அண்ணாஜிராவ் என்ற பிரபல வக்கீல் மேற்படி பாரிஸ்டருக்கு எதிரில் பூனை போல அடங்கி உட்கார்ந்திருந்தார். அவர் உயரத்தில் நான்கு அடியே இருந்தார். ஆனாலும், சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில், தமது திறமையினால், அவர் மகா விஷ்ணுவின் வாமனாவதாரம் எப்படி திரிவிக்கிரமாவதாரமாய் உயர்ந்து உலகம் முழுதும் நிரம்பியதோ அது போலச் செய்யத்தக்க மகா மேதாவியாய் இருந்தார். அவரை ஜனங்கள் மிளகு குடுக்கை அண்ணாஜிராவ் என்ற காரணப் பெயரினால் அழைத்தனர். ஜனங்களுக்குப் பரபரப்பை உண்டாக்கக் கூடிய முக்கியமான வழக்குகளில் கச்சேரியில் ஆயிரக் கணக்கில் ஜனங்கள் கூடி அந்த ராயர் பேசுவதைக் கேட்கவும், அவருடைய குறுக்கு விசாரணையின் சாமர்த்தியத்தைப் பார்க்கவும் வருவார்கள். ஆனால், மற்ற வக்கீல்களின் இடையில் அவர் அகப்பட்டுப் புதைந்து போய்விடுவார் ஆதலால், ஜனங்கள் எவ்வளவு தான் முயன்றாலும், அவரது வடிவத்தைக் காண முடியாதாயினும், தேங்காய் உடைப்பது போல, அவர் அபார சாமர்த்தியத்தோடு குறுக்கு விசாரணை செய்யும் குரலோசையை யும், சடார் படார் என்று சிலம்பம் விளையாடுவது போலவும், கலகலவென்று புளியம்பழம் உலுக்குவது போலவும் அவர் வாக்குவாதம் செய்யும் குரலோசையும் கணி கணி என்று வெகு துரம் வரைக்கும் கேட்கும். அத்தகைய பெருங்கீர்த்தி வாய்ந்த சிறிய மூர்த்தி காலத்திற்கு முன்பே ஆஜராய் அந்த வழக்கின் தகவல் எதையும் அறிந்து கொள்ளாதவர் போல நிஷ்களங்கமான முகத் தோற்றத்தோடு உட்கார்ந்திருந்தார். இன்னும் பல போலீஸ் இன்ஸ் பெக்டர்களும் மற்ற ஜெவான்களும் ஏராளமாகக் கூடியிருந்தனர். விசாரணை குமாஸ்தா உமாமகேசுவர ஐயர் என்பவர் சாந்துப் பொட்டணிந்து, முறுக்காகக் கஞ்சியேற்றப்பட்ட தூய வெள்ளை யான ஆடைகளை அணிந்து கருக்காகத் தமது கேஸ் கட்டுகளை ஒழுங்குப் படுத்திக் கொண்டு அன்றைய தினம் சுருக்காகவே வந்து உட்கார்ந்து ஜட்ஜி துரையின் வருகையை ஆவலோடு எதிர்பார்த் திருந்தார். சரியாக மணி 11 அடித்தது. ஜட்ஜ் விண்டர் போதம்,