பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மாயா விநோதப் பரதேசி ஐ.சி.எஸ். துரை பிரசன்னமாகித் தமது ஆசனத்தில் அமர்ந்து, விசாரணை குமாஸ்தாவை நோக்கி, "இன்று எந்த வழக்கு விசாரணைக்குப் போட்டிருக்கிறது?" என்றார். விசாரணை குமாஸ்தா, "ஜெயிலிலிருந்து தப்பி ஓடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவரின் வழக்கு விசாரணைக்குப் போடப்பட்டிருக்கிறது" என்று கூறி அந்த வழக்கு சம்பந்தமான காகிதக் கட்டை எடுத்து ஜட்ஜிக்கு முன்னால் வைக்க, அவர் அதில் இருந்த காகிதங்களைத் தள்ளித் தள்ளி அங்குமிங்கும் படித்துப் பார்த்துவிட்டு, சாந்தமே வடிவாக நிமிர்ந்து தமக்கெதிரில் இருந்த வக்கீல்களைப் பார்த்தார். வலது பக்கமாயிருந்த சாட்சிக் கூண்டிற் கருகில் நின்று கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி, "குற்றவாளிகளை அழைத்து வாருங்கள்" என்றார். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் பக்கத்திலிருந்த ஜெவானைப் பார்க்க, அவன் உடனே வெளியில் ஓடினான். ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது. அங்கே கூடியிருந்த வக்கீல்களும் மற்ற ஜனங்களும் சட்டைநாத பிள்ளை வரப் போகிறார் என்றும், அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்கவும் ஆவல் கொண்டு வாசற்படியைப் பார்த்தபடி இருந்தனர். அப்போது மாசிலாமணியை அழைத்துக் கொண்டு இரண்டு ஜெவான்கள் உள்ளே வந்தனர். ஆனால், அவர்கள் அவனைக் கைதிகள் நிற்கும் கூண்டிற்குப் பக்கத்தில் கொண்டு வந்து நிற்க வைத்தார்கள். அவன் தனது கையில் பன நோட்டுகள் அடங்கிய மூட்டை ஒன்றை வைத்துக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நின்றான். அவன் வந்ததைக் கண்ட ஜட்ஜ் துரை இன்ஸ் பெக்டரைப் பார்த்து, "இவர் யார்?" என்று கேட்க, இன்ஸ் பெக்டர், "இவர் சட்டைநாத பிள்ளையின் தம்பி. சட்டைநாத பிள்ளையைப் பிடித்துக் கொடுக்கிறவர்களுக்குத் தாமும் பதினாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாக இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகை யால், பணத்தோடு இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கி றோம். விசாரணையின் முடிவில் பதினையாயிரம் ரூபாயைக் கோர்ட் டாரே அதற்குரியவருக்குச் சன்மானிக்க வேண்டும்" என்றார். அந்தச் சமயத்தில் கத்தி துப்பாக்கிகளோடு வேறு மூன்று கைதிகளை நடத்தி அழைத்துக் கொண்டு நான்கு ஜெவான்கள் உள்ளே நுழைந்து, அவர்கள் மூவரையும் ஜட்ஜிக்கு நேர் எதிரில்