பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாயா விநோதப் பரதேசி முடிவிற்கு வந்து அளவற்ற விசனமும், త్రతాణg, மனக் குழப்பமும் அடைந்து ஒய்ந்து படுக்கையில் LGశ54Gu இருந்துவிட்டாள். தனது குழப்பமான மன நிலைமையில்தான் பரீட்சைக்குப் போய், அவ்விடத்தில் சரியானபடி விடை எழுத முடியாதென்ற எண்ணம் தோன்றியது ஆகையால், அவள் அந்தப் பரீட்சைக்கு அடுத்த வருஷம் போகலாம் என்று தீர்மானித்துக் கொண்டு, அன்றைய தினம் போஜனத்தை நாடாமலும், கலாசாலைக்கே போகாமலும் இருந்து விட்டாள். வேலைக்காரி பன்முறை வந்து போஜனத்திற்கு வரும்படி அழைத்ததற்கு, தனக்கு வயிறு மந்தமாயிருப்பதாயும், தனக்கு மாலை வரையில் ஆகாரம் வேண்டாம் என்றும் மறுமொழி கூறிவிட்டு, கட்டிலே கதியாக இருந்து சஞ்சலக் கடலில் ஆழ்ந்து அன்றைய பகற் பொழுதைப் போக்கினாள். பட்டாபிராம பிள்ளை தமது கச்சேரி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் அதை விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் கோபாலசாமியைப் பார்த்து, அவனது நிலைமையில் எவ்வித மாறுபாடும் ஏற்படாததை உணர்ந்து கொண்டு நேராக கோமளேசுவரன் பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தார். அன்றைய தினம் அவர் தனது கச்சேரியை விட்டுப் புறப்படுவதற்கு முன் டெலிபோன் யந்திரத்தின் மூலமாய்ப் போலீஸ் கமிஷனரோடு பேசிவிட்டு வந்திருந்தார் ஆதலால், கந்தசாமியைப் பற்றி அவர் வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு எவ்வித புதிய தகவலும் கூற இயலவில்லை ஆனாலும், அவர்கள் அன்றைய தினம் செளகரியமாக போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டது முதலிய அவர்களது யோக கேஷமங்களைப் பற்றி விசாரித்தார். வேலாயுதம் பிள்ளையும் மற்றவர்களும் கந்தசாமியைப் பற்றி எவ்விதமான செய்தியும் தெரியாதிருந்தமை யாலும், தாம் எங்கே போய் அவனைத் தேடுவது என்பதை உணர மாட்டாத நிலைமையில் இருந்தமையாலும், அவர்களது விசனமும், கவலையும், மனவேதனையும், முகவாட்டமும் நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து மலை போலப் பெருகிக் கொண்டே போயின. ஆதலால், அவர்கள் இருந்த மகா பரிதாப கரமான நிலைமையைக் கண்ட பட்டாபிராம பிள்ளையும் அவர்க ளைப் போல நிரம்பவும் தத்தளித்து அவர்களுக்கு எவ்விதமான