பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 தேறுதல் கூறுவதென் பதை அறியாமல் தடுமாறி, "எப்படியும் போலீசார் கூடிய சிக்கிரம் பிள்ளையாண்டானைக் கண்டு பிடித்து விடுவார்கள்" என்ற ஜோசிய வசனத்தைப் பன்முறை உப யோகித்து, அவர்களைப் பன்முறை தேற்றி விட்டு இரவு எட்டு மணி வரையில் அவர்களோடிருந்து அவ்விடத்தை விட்டுத் தமது பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். சேர்ந்தவர், காலை முதல் தமது புதல்வியோடு புேசாம்ல் இருந்தவர் ஆதலாலும், அவள் தனது பரீட்சையில் எப்படி மறுமொழி எழுதி இருக்கிறாள் என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தவர் ஆதலாலும், அவர் நேராகத் தமது புதல்வியின் விடுதிக்குப் போய்ச் சேர்ந்து அவளைப் பார்க்க, அவள் தனது கட்டிலின் மேல் அலங்கோலமாகப் படுத்து அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த காட்சி தென்பட்டது. அவள் பரீட்சைக்குப் போய் வந்த அலுப்பினால் அவ்வாறு துங்குகிறாள் என்ற எண்ணம் உடனே அவரது மனதில் தோன்றியது ஆகையால், அவளை எழுப்பக் கூடாதென்றும், அவளோடு மறுநாட் காலையில் பேசிக் கொள்ளலாம் என்றும் தீர்மானித்துக் கொண்டவராய், அவர் தமது விடுதிக்குச் சென்று, தமது உடைகளை மாற்றிக் கொண்டு போஜனத்திற்குச் சென்ற காலத்தில், வேலைக்காரி அவளிடம் வந்து, "எஜமானே! குழந்தை காலை முதல் சாப்பிடவே இல்லை. வயிறு மந்தமாக இருக்கிற தென்று சொல்லிக் கொண்டே இருந்து, அப்படியே தூங்கிப் போய்விட்டது. நீங்கள் அதை எழுப்பி, கொஞ்சம் ஆகாரம் சாப்பிடும்படியாவது செய்ய வேண்டும்; அல்லது, டாக்டரை வரவழைத்து மருந்தாவது கொடுக்கச் செய்ய வேண்டும்" என்றாள். - அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை திடுக்கிட்டு, மிகுந்த கலக்கமும் கவலையும் அடைந்து, "என்ன காலையிலிருந்து இன்னமும் சாப்பிடவே இல்லையா? அப்படியானால் பரீட்சைக்குப் போகவில்லையா?" என்று பதைபதைப்பாக வினவினார். வேலைக்காரி, "காலை முதல் தண்ணிர் கூடக் குடிக்கவில்லை; பரீட்சைக்கும் போகவில்லை; அப்படியே படுத்த படுக்கையாக இருக்கிறது" என்றாள்.