பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மாயாவிநோதப் பரதேசி பட்டாபிராம பிள்ளை, "என்ன விபரீதம் இது: எவ்வளவோ வெகு காலமாகப் பட்சைக்குப் படித்தவள். அதற்கு* பாடுபட்டு بي بي سي چ உடம்பின் فما مسا (كتة قي له وي ஆடப் போகவில்லை என்றால், கிலைமை சகிக்க முடியாததாக இருக்க வேண்டுமே, நீங்கள் } * હ * பகலிலேயே இத்ை டெலிபோன் மூலமாக எனககுச சொல்லி இருக்கக்கூடாதா? நான் உடனே வந்து டாக்டரை வரவழைத்து மருந்து கொடுக்கச் செய்திருப்பேனே! என்றார். வேலைக்காரி, ' டெலிபோன் வழியாக உங்களுக்கு இந்தச் சங்கதியைத் தெரிவிக்கட்டுமா என்று நான் குழந்தையைக் கேட்டதற்கு, வேண்டாம் பரவாயில்லை. சாயுங்காலத்திற்குள் உடம்பு சரியாய்ப் போய்விடும். அப்பாவுக்கு அநாவசியமான மனக்கவலையை உண்டாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டது. அதனால் நான் அப்படிச் செய்யவில்லை” என்றாள். அதைக் கேட்டுக் கொண்ட பட்டாபிராம பிள்ளை மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்தவராய் போஜனத்தை நாடாமல் அவ்விடத்தை விட்டு மறுபடி மனோன்மணியம்மாளின் விடுதிக்குப் போய்க் கட்டிலண்டை நின்றபடி, "அம்மா அம்மா மனோன்மணி என்று பன்முறை கூப்பிட: அந்த மடந்தை அப்புறம் இப்புறம் புரண்டு விழித்துக் கொண்டு தனது தந்தையின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து தனது கேசத்தையும் ஆடைகளையும் திருத்தி முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மின்சார விளக்கின் வெளிச்சம் பளிச்சென்று தாக்கிய தாகையால் அவளது கண்கள் கூசின. அவள் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள். - உடனே பட்டாபிராம பிள்ளை, "அம்மா உடம்பு என்ன செய்கிறது? நீ காலையிலிருந்து சாப்பிடவே இல்லையாம்; பரீட்சைக்கும் போகவில்லையாம். வயிறு மந்தமாய் இருந்தால், உடனே ஒரு டாக்டருக்குச் சொல்லி அனுப்பி, ஏதாவது மருந்து சாப்பிட்டால்; உடனே உடம்பு செளக்கியமாய்ப் போகிறது. அதை விட்டு இப்படி படுத்துக் கொண்டிருக்கிறாயே! வேலைக் காரி டெலிபோன் மூலமாய் இதை எனக்குத் தெரிவிக்கலாம் என்று கேட்டதற்கும், வேண்டாம் என்று சொல்லி விட்டாயாம். போனது