பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 போகட்டும். இப்போது உடம்பு எப்படி இருக்கிறது? கொஞ்ச மாவது வயிற்றில் பசி உண்டாயிருக்கிறதா? எழுந்து வா. நானும் இன்னும் சாப்பிடவில்லை. இரண்டு பேருமாகப் போய்ச் சாப்பிட லாம். ஏதோ பிடித்த வரையில் கொஞ்சம் சாப்பிடு" என்று உருக்கமாகவும் வாஞ்சையாகவும் கூறினார். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் தனது உண்மையான மனநிலைமையை அப்போது எப்படி வெளியிடுவது என்பதை உணராது சிறிது நேரம் தத்தளித்தாள். காலை முதல் அன்னம் தண்ணிர் முதலியவை எதுவுமன்றி இருந்தமையால், அவளது நுட்பமான தேகம் முற்றிலும் தளர்ந்து கட்டிலடங்காமல் துடித்த தாகையால், தான் தனது தந்தையோடு வாக்கு வாதம் புரிவதற்குப் போதிய வலுவில்லை என்பதை அவள் உணர்ந்து, தனது உண்மையான மனநிலைமையை மறுநாட் காலையில் அவரிடம் தெரிவிக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டதன்றி, அவர் சந்தேகிக்காது இருக்குமாறு, அப்போது போய்ச் சிறிதளவு போஜனம் செய்து கொள்ள நினைத்தவளாய் மெதுவாகக் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி "உடம்பு இப்போது கொஞ்சம் குணப்பட்டிருக்கிறது. வயிறு பசிப்பது போலவும் இருக்கிறது. கொஞ்சம் சாப்பிட்டுப் பார்க்கலாம்" என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நடக்கத் தொடங்கினாள். உடனே தந்தையும் புதல்வியும் சமையலறைக்குச் சென்றனர். பட்டாபிராம பிள்ளை வழக்கப்படி தமது போஜனத்தை முடித்துக் கொண்டார்; மனோன்மணியம்மாளுக்கு அவளது மனவேதனை யில் போஜனத்தின் மேல் அதிக விருப்பம் ஏற்படவில்லை ஆதலால், அவள் சொற்பமாக மிளகு ரசமும் அன்னமும் உட்கொண்டாள். அவளது தேகஸ்திதி கெட்டிருக்கையில், தாம் பல கேள்விகள் கேட்டு அவளை வருத்தக் கூடாதென்று நினைத்த அவளது தந்தை அவளிடம் அதிகமாய் வார்த்தை ஆடாமல், மிகுந்த வாத்சல்யத்தோடு அவளை உண்பித்து அழைத்து வந்து மறுபடியும் படுக்கையில் சயனிக்கச் செய்து விட்டு, தாமும் போய்த் தமது சயனத்தை அடைந்தார் அந்த இரவு எவ்வித விசேஷ சம்பவமும் இன்றிக் கழிந்தது.