பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாயா விநோதப் பரதேசி மறுநாட் காலையில் பட்டாபிராம பிள்ளை எழுந்து தமது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மனோன்மணியம்மாளது தேக நிலைமையைப் பற்றி விசாரிக்கும் பொருட்டு அவளது விடுதிக்குச் சென்றார். அவளும் எழுந்து படுக்கையிலேயே சாய்ந்த படி உட்கார்ந்திருந்தாள் ஆனாலும், அவளது முகம் மிகுந்த வாட்டத்தையும் அளவற்ற விசனத்தையும் மனத் தளர்ச்சியையும் தோற்றுவித்தது. அதைக் கண்ட அவளது தந்தை மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்து அவளிடம் நெருங்கி, "மனோன் மணி உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? டாக்டரை அழைக்கட்டுமா?" என்று வாஞ்சையோடு வினவினார். மனோன்மணியம்மாள் சிறிதும் உற்சாகமும் முகமலர்ச்சியும் அற்றவளாய், "உடம்பில் நோய் ஒன்றுமில்லை. மனசு தான் நோய் கொண்டிருக்கிறது. அதற்கு எந்த டாக்டர் மருந்து கொடுக்கப் போகிறார். மனசுக்கு மனசே டாக்டர்" என்று நிரம்பவும் விரக்தியாக மறுமொழி கூறினாள். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை ஒருவித வியப்பை அடைந்தார் ஆனாலும், முதல் நாள் தான் பரீட்சைக்குப் போக இய்லாமல் போனது பற்றி, அவள் அப்போது விசனமுற்று வருந்துகிறாள் என்று தீர்மானித்துக் கொண்டவராய், "அம்மா! எதற்காக உன் மனசு நோய் கொள்ள வேண்டும்? இந்தப் பரீட்சை போனால், இதனால் குடியே முழுகிப் போய்விட்டதா. வெறும் பெருமைக்காகவும், ஆசைக்காகவும், உன்னை நான் இந்தப் பரீட்சைக்குப் போகச் சொன்னதே யன்றி, இந்தப் பட்டத்தை நீ இந்த வருஷமே சம்பாதித்துக் கொள்ளாவிட்டால், உனக்கு உத்தி யோகத்தில் சம்பள உயர்வு இல்லாமல் போய் விடுமா? இந்த வருஷத்தில் இல்லாவிட்டால், அடுத்த வருஷத்தில் நீ பரீட்சைக்குப் போனால் அந்தப் பட்டம் கிடைக்கிறது. உடம்பல்லவா பிரதானம். உடம்பு அசெளகியப்பட்டுப் போனால், அந்த நிலைமையில் யார் தான் பரீட்சைக்குப் போவார்கள்" என்று உருக்கமாகவும், வாஞ்சையாகவும் கூறினார். உடனே மனோன்மணியம்மாள், "அடுத்த வருஷந்தான் நான் எதற்காக இந்தப் பரீட்சைக்குப் போக வேண்டும்? பரீட்சைக்குப்