பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மாயா விநோதப் பரதேசி துருக்கர்கள் அல்லவா வந்திருக்கிறார்கள். இது ஒரு வேளை வேறே வழக்காக இருக்குமோ? சட்டைநாத பிள்ளையின் வழக்கை ஒரு வேளை இதற்குப் பிறகு எடுத்துக் கொள்வார்களே' என்று தணி வான குரலில் கூறினர். வேறு சிலர், "ஒரு வேளை சட்டைநாத பிள்ளை தான் துருக்கராய் உருமாறி இருக்கிறாரோ என்னவோ?" என்றனர். சட்டைநாத பிள்ளையை அதற்கு முன் பார்த்திருந்த சிலர், "ஆமய்யா, ஆமய்யா அதோ குட்டையாக இருக்கிறாரே! அவர் சட்டைநாத பிள்ளை போலவே இருக்கிறாரைய்யா! சரி சரி; அவர் தான் சட்டைநாத பிள்ளை' என்றனர். அதைக் கேட்ட மற்றவர், "ஓகோ அப்படியா ஜெயிலிலிருந்து தப்பி ஓடிவந்து துருக்க சாயப்புவைப் போல வேஷம் போட்டுக் கொண்டா அவர் ஒளிந்து கொண்டிருக்கிறார்; அவரோடு கூட இருக்கும் மற்ற இருவரும் யார் என்பது தெரியவில்லையே!" என்றனர். வேறு சிலர், "இன்னம் கொஞ்சம் பொறுத்தால் எல்லா விவரமும் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்து போகிறது" என்று கூறினர். அங்கிருந்த கச்சேரி டபேதார், "உஸ் உஸ், யாரும் பேச வேண்டாம்" என்று கூறி அடக்க, உடனே எல்லோரும் வாயை மூடிக் கொண்டு, ராயர் என்ன பேசப் போகிறார் என்பதையே மிகுந்த ஆவலோடு கவனிக்கத் தொடங்கினர். ராயர் தாம் குள்ளமாய் இருக்கிறோம் ஆதலால் மற்றவருக்குச் சரியாக உயர வேண்டும் என்று எண்ணுகிறவர் போலத் துள்ளித் துள்ளிக் குதித்த வண்ணம் கனர் கணிர் என்று பேசத் தொடங்கி, "நியாயாதிபதி அவர்களே! இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்கும் முன் வழக்கப்படி நான் இதன் ஸாரத்தை சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் சொல்லி விடுகிறேன். இப்பொழுது கொண்டு வரப் பட்டிருக்கும் வழக்கு முதல் பார்வைக்கு நிரம்பவும் சிக்கலாகத் தோன்றும் என்பது நிஜமே. ஆயினும் இதை நாம் மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பாகமாய் எடுத்துக் கொண்டு விசாரணையை அதற்குச் சம்பந்தப்பட்ட வரையில் நடத்திக் கொண்டு போவதே நல்லது. பத்து வருஷ காலத்திற்கு தண்டனை அடைந்து சிறைச்சாலையில் இருந்த கைதியான சட்டைநாத பிள்ளை என்பவர் வார்டர்களிடம் பாதுகாப்பிலிருந்து