பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221 தப்பி ஒடிய குற்றத்தை நாம் முதல் அம்சமாக எடுத்துக் கொள்வோம். அது முடிந்த பிறகு, பல வந்தமாக சட்டைநாத பிள்ளையை விடுவிக்க அனுகூலமாய் இருந்தது, அவர் ஒளிந்திருந்த உதவியாய் இருந்தது ஆகிய குற்றங்களைச் செய்த துணைக் குற்றவாளிகளின் வழக்கை நாம் இரண்டாவது அம்சமாக வைத்துக் கொள்வோம். அந்தத் துணைக் குற்றவாளிகளுள் சிலர் வேறு முக்கியமான சில குற்றங்களையும் செய்திருக்கிறார்கள் ஆதலால், அதை நாம் மூன்றாவது அம்சமாக வைத்துக் கொள்வோம். இப்போது நாம் முதலாவது அம்சத்தைக் கவனிப்போம். கும்பகோணத்தில் பெரிய தெருவில் இருந்தவரும், வக்கீல் வேலை பார்த்து வந்தவருமான சட்டைநாத பிள்ளை என்பவர் ஏதோ சில குற்றங்கள் செய்ததற்காக சுமார் இரண்டு வருஷ காலத்திற்கு முன் மன்னார்குடி ஸ்பெஷல் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டினால் பத்து வருஷ காலத்திற்குக் கடினக் காவல் தண்டனை விதிக்கப்பெற்று இந்த ஊர்ப் பெரிய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த ஊர் ஜெயிலில் ஆட்டப்படும் நல்லெண்ணெயை வார்டர்கள் ஒரு கைதியின் தலையில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்து விற்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கடைசி இரண்டு மாதகாலமாய்ச் சட்டைநாத பிள்ளை செக்கோட்டும் உத்தியோகத்திலிருந்து, எண்ணெய் துக்கி விற்கும் உத்தியோகத்திற்கு உயர்த்தப்பட்டார். சுமார் 20 தினங்களுக்கு முன் ஒரு நாள் எண்ணெய்க் குடத்தைக் கூடைக்குள் வைத்துத் தலையில் சுமந்து சட்டைநாத பிள்ளை பரமசாதுவாய் இந்த ஊர் மேற்கு ராஜவீதியின் வழியாக வந்து கொண்டிருந்தார். இரண்டு வார்டர்கள் காவலாக அவரோடு வந்து கொண்டிருந்தனர். ஒரு சந்தின் பக்கத்தில் அவர்கள் வந்த போது அவ்விடத்தில் ஒரு விநோத சம்பவம் நடந்தது. அதன் விவரம் பத்திரிகைகளில் நன்றாக வெளியிடப்பட்டிருப்பதால், இந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கும் விவரத்தைப் படிக்கிறேன்" என்று கூறி, ஒரு பிரபலக்கைதி ஜெயிலிலிருந்து தப்புவிக்கப் படுகிறார் என்ற தலைப்பின் கீழ் இந்தக் கதையின் இரண்டாவது அதிகார முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி முழுதையும் தெளிவாகப் படித்துக் காட்டினார். காட்டிய பின் ராயர் மேலும் பேசத்