பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மாயா விநோதப் பரதேசி தொடங்கி, "அதன் பிறகு போலீசார் இந்தச் சட்டைநாத பிள்ளை எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்து, பார்க்கக்கூடிய சகலமான இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டார்கள். இவர் எங்கும் அகப்படவில்லை. சட்டைநாத பிள்ளையின் தம்பி மாசிலாமணிப் பிள்ளை என்பவர் கொடுப்பதாகச் சொன்ன பதினாயிரம் ரூபாயோடு சர்க்காரில் ரூபாய் ஐயாயிரம் சேர்த்து, பதினையாயிரம் ருபாய் வெகுமதி கொடுக்க ஒதுக்கி வைத்திருப்பதாகவும், சட்டைநாத பிள்ளையைப் பிடித்துக் கொடுப்போருக்கு அதை உடனே கொடுப்பதாகவும் போலீசார் இந்த இந்தியா முழுமையிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கெல்லாம் விளம்பரம் அனுப்பி பத்திரிகைகளிலும் பகிரங்கப் படுத்தினார்கள். போன வியாழக்கிழமை வரையில் எவ்விதத் தகவலும் தெரியா திருந்தது. வெள்ளிக்கிழமை தினம் சென்னப்பட்டணத்திலிருந்து ஜானிஜான் கான் சாயப்பு என்ற ஒருவர் கும்பகோணம் போலீசாரிடம் வந்து தாம் சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு போய், அந்த இடத்தைக் காட்டினார். கும்பகோணத்தில் லப்பைத் தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. அதில் சுமார் 200-வீடுகள் இருக்கின்றன. அந்தத் தெருவில் இருப்பவர்கள் எல்லோரும் துருக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தெருவில் உள்ள துருக்கருக்குள் கட்டுப்பாடும் சுயஜாதி அபிமானமும் அதிகம். அன்னிய ஜாதியார் அந்தத் தெருவிற்குள் வந்து ஏதேனும் சேஷ்டை செய்தால், அவர்களிடமிருந்து உயிரோடு தப்பி வெளியில் போவது துர்லபம். போலீசார்கூட அந்தத் தெருவிற்குள் போக அஞ்சுவார்கள். எல்லா வீடுகளிலும் கோஷா ஸ்திரிகள் இருப்பார்கள் ஆதலால், கதவுகள் எப்போதும் அநேகமாய் சாத்தப்பட்டே இருக்கும். போலீசாராயினும் மற்றவ ராயினும் அந்தத் தெருவிற்குள் போய் அற்ப சங்கதியும் தெரிந்து கொள்ள முடியாது. அத்தெருவில் உள்ள ஒரு துருக்கருக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்துவிட்டால், மற்ற எல்லோரும் அவருக்கு உதவியாக உடனே கூடிவிடுவார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடான தெருவின் நடுவில், சட்டைநாத பிள்ளை துருக்கராக மாறி,