பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மாயா விநோதப் பரதேசி போலவே இருப்பதாலும், இவரைக் கைது செய்தீர், கைரேகை களும் ஒத்துக் கொண்டன. அதிருக்கட்டும், மற்ற இருவர்கள் தாசி பத்மாசனியம்மாள் என்றும், அவளுடைய அண்ணன் கலியப் பெருமாள் பிள்ளை என்றும் சொன்னரே. அதற்கு ருஜூ ஒன்றும் ஏற்படவில்லையே? ராயர்: அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். குள்ளமாய் இருப்பவர் சட்டைநாத பிள்ளை என்று ருஜூப்படுத்து வதே போதுமானது. மற்ற இருவரும் அவருக்கு உதவியாக இருந்ததான குற்றத்தைச் செய்தார்கள் என்று ருஜுவாவதே போதுமானது. அந்த ருஜூவை இரண்டாவது அம்சத்தில் கொடுக்கிறோம். நீங்கள் இப்போது சொன்னதிலிருந்து, இவர் சட்டைநாத பிள்ளை என்று ருஜூவாய்விட்டதைத் தாங்களும் ஒப்புக் கொள்ளுகிறீர்கள். அதுவே போதுமானது. பாரிஸ்டர்:- யாரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சாயப்பு சட்டைநாத பிள்ளையைப் போல இருக்கிறார் என்று நீங்கள் ருஜூப்படுத்தினிகளே யன்றி, இவர் சட்டைநாத பிள்ளை தான் என்று ருஜூப்படுத்தவே இல்லை. ராயர்:- ஒகோ! அப்படியா! தாங்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும். நியாயாதிபதியும் மற்ற யாவரும் அப்படி நினைக்க மாட்டார்கள். நியாயாதிபதியும் திருப்தி அடைந்திருப்பார் என்பது நிச்சயம் - என்றார். உடனே ஜட்ஜி துரை கைதிக் கூண்டில் நின்ற குள்ளமான மனிதரைப் பார்த்து, "சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிவந்த சட்டைநாத பிள்ளை நீர் தான் என்று இப்போது சாட்சிகள் சொன்னார்களே. அது உண்மைதானா?" என்றார். குள்ளமான கைதி, "அது சுத்தப் பொய்; நான் ஒரு பாவத்தையும் அறியேன். நான் முஸ்லீம் தாய் தகப்பன்மாருக்குப் பிறந்தவன்" என்றார். ஜட்ஜ்:- உம்முடைய பெயர் என்ன? கைதி:- என்னைக் கமாலுதீன் சாயப்பு என்று கூப்பிடுவார்கள். ஜட்ஜ்:- மற்ற இருவரும் யார்? அவர்களுடைய பெயர் என்ன?