பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 231 கமாலுதீன்:- இவன் என்னுடைய தம்பி. இவனுடைய பெயர் அப்துல் வகாப் சாயப்பு. அதோ இருக்கும் கோஷா என்னுடைய பெண்ஜாதி. அவளுடைய பெயர் மும்தாஸ் பீ.பீ. ஜட்ஜ்:- நீங்கள் என்ன தொழில் செய்கிறவர்கள்? கமாலுதீன்:- நாங்கள் கமிஷன் வியாபாரம் செய்து, எந்தெந்த சமயத்தில், எந்தெந்த சரக்கு மலிவாக விற்கிறதோ, அதை வாங்கி இந்த கைக்கு அந்தக் கை விற்று லாபம் சம்பாதிக்கிறது. ஜட்ஜ்:- நீர் எப்போதும் கும்பகோணம் லப்பைத் தெருவில் தான் இருக்கிறதா? கமாலுதீன்:- எங்களுடைய சொந்த ஊர் நாகூர். கும்பகோணத் துக்கு வந்து ஆறுமாதகாலம் ஆகிறது. ஜட்ஜ்:- கும்பகோணத்தில் நீங்கள் இருப்பது சொந்தவீடா? வாடகை வீடா? கமாலுதீன்:- சொந்த வீடு. ஆறுமாதத்துக்கு முன் வாங்கினோம். ஜட்ஜ்:- வீடு யார் பேரில் வாங்கப்பட்டிருக்கிறது? விற்றது யார்? கமாலுதீன்:- வீடு எங்கள் இரண்டு பேரிலும் வாங்கப்பட்டிருக் கிறது. மீராசா லெப்பை என்பவர் அதை எங்களுக்கு விற்றார். ஜட்ஜ்:- வீட்டை நீங்கள் வாங்கனிர்களே அப்போதாவது, அந்தப் பத்திரம் சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியில் ரிஜிஸ்டர் செய்யப் பட்டதே அப்போதாவது அந்த மீராசா லெப்பை உம்மைப் பார்த்த துண்டா? கமாலுதீன்:- நான் அப்போது வியாபாரத்தின் நிமித்தம் வடக்கே யுள்ள திருப்பத்துர் வாணியம்பாடிக்குப் போயிருந்தேன். வீட்டை வாங்கும்படி என் தம்பியினிடம் சொல்லிவிட்டுப் போனேன். அவன் தான் வாங்கினான். ஜட்ஜ்:- நீர் அந்த மீராசா லெப்பையைப் பார்த்ததுண்டா இல்லையா? கமாலுதீன்:- இல்லை.