பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மாயா விநோதப் பரதேசி ஜட்ஜ்:- நாகூரில் நீங்கள் இருந்தது சொந்த வீடா? வாடகை வீடா? கமாலுதீன்:- வாடகை வீடு. ஜட்ஜ்:- அது யாருடைய வீடென்பது ஞாபகமிருக்கிறதா? கமாலுதீன்:- நாங்கள் அப்போது ஏழ்மை நிலைமையில் இருந் தோம். பல இடங்களில் இருந்திருக்கிறோம்; சில சந்தர்ப்பங்களில் சத்திரம் சாவடிகளில் கூடத் தங்கியிருந்திருக்கிறோம். கடைசியாக நாங்கள் நாகூரில் ஒரு மரைக்காயருடைய தர்மக் கட்டிடத்தில் இருந்தோம். அவருடைய பெயரை நாங்கள் விசாரிக்கவில்லை. ஜட்ஜ்:- உமக்குச் சொந்தமான முஸ்லீம்கள் யாராவது இருக்கிறார்களா? கமாலுதீன்:- எல்லா முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே. அதைத் தவிர எங்களுக்கு நெருங்கிய பந்து யாருமில்லை. எங்கள் தாய் தகப்பன்மார் ஏழைப் பக்கீர்களாய் இருந்தவர்களாம்; சிறு பிராயத்திலேயே எங்களை விட்டு இறந்து போய்விட்டார்கள். ஜட்ஜ்:- உம்முடைய சம்சாரத்தின் தாய் தகப்பன்மார் எந்த ஊரில் இருக்கிறார்கள்? கமாலுதீன்:- அவளுடைய தாய் தகப்பன்மார்களும் எங்களைப் போலவே ஏழைப் பக்கீர்கள். அவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை. ஜட்ஜ்:- உமக்காவது உம்முடைய தம்பிக்காவது இங்கிலீஷ் பாஷை தெரியுமா? கமாலுதீன்:- தெரியாது.

  • -

ஜட்ஜ்:- உங்கள் மூவருக்கும் துருக்க பாஷை தெரியுமா? கமாலுதீன்:- தெரியும். ஜட்ஜ்: நீங்கள் குரான் முதலிய வேதங்களைப் படித்திருக்கிறீர் களா? அந்த வேதங்களில் கேள்விகள் கேட்டால் சரியான உத்தரம் கொடுக்க முடியுமா?