பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மாயாவிநோதப் பரதேசி ஒருவன், அவனுடைய ரேகை அடையாளத்தைப் பரிசோதிப்ப தால், இதற்கு முன் அவன் பல தடவை தண்டனை அடைந்த பழைய குற்றவாளி என்பதைக் கண்டு அவனுக்கு ஐந்து வருஷக் கடினக்காவல் தண்டனைகூடக் கொடுத்து விடுகிறார்கள். அப்படி இது வரையில் தண்டனை கொடுத்துவரும் நியாயாதிபதிகளின் தீர்மானங்கள் எல்லாம் அக்கிரமத் தீர்மானம் என்றல்லவா அர்த்த மாகும். ஆகையால், ஜட்ஜூ துரையவர்கள் மற்ற எதை அலட்சியஞ் செய்தாலும் ரேகை சாஸ்திர நிபுணருடைய சாட்சியத்தை அவசியம் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கி றார்கள். அதை அலட்சியம் செய்துவிட்டால், இனி துரைத்தனத் தார் அந்த இலாகாவையே எடுத்துவிட நேரும். இதுவரையில் அதன் சாட்சியத்தால் அதிக தண்டனை அடைந்திருப்பவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்து விடுவிக்க நேரும். இனி, பழைய குற்றவாளி களைக் கண்டு பிடிக்கும் முறையே இல்லாமல் போய்விடும். ஆகையால், ஜட்ஜ் துரையவர்கள் இதில் வேறுவிதமான அபிப்பிராயம் கொள்வதற்கே வழியில்லை. இது நிற்க. கைதி இப்போது இருக்கும் வீட்டைத் தாம் வாங்கவில்லை, தமது தம்பியே வாங்கினார் என்று சொல்வதையும், வீட்டை விற்றவரைப் பார்த்ததே இல்லை என்பதையும், இந்த வீட்டிற்கு வரும் முன் இவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதைப் பற்றியும், இவர்களுடைய உறவினர்களைப் பற்றியும் இவர் எவ்விதமான பிடியும் கொடாமல் வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் ஜட்ஜ் துரையவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், இவர் சட்டைநாத பிள்ளையேயன்றி, வேறே மகம்மதியர் அல்லர் என்பது எளிதில் தெரிந்துபோம். ஆகையால், இவர் தான் சட்டை நாத பிள்ளை. இவர் சிறைச்சாலையில் இருந்து பலவந்தமாகத் தப்பித்து வந்து ஒளிந்திருந்த குற்றத்தைச் செய்திருக்கிறார். அதற்குத் தக்க தண்டனையை நியாயாதிபதி அவர்கள் ஏற்படுத்தி இவரை மறுபடி சிறைச்சாலைக்கு அனுப்புவதே நியாயமான விஷயம்" என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். உடனே பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை எழுந்து நின்று, "கோர்ட்டார் அவர்களே! நான் இதுவரையில் எத்தனையோ வழக்குகளில் ஆஜராயிருக்கிறேன். இதைப் போல இவ்வளவு அடாண்டமாக