பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237 ஒரு நிரபராதியின் மேல் கொண்டுவரப்பட்ட வழக்கை நான் பார்த்ததே இல்லை.இப்போது ருஜூவான மூன்றுவகை சாட்சியங் களும், இவர் சட்டைநாத பிள்ளையைப் போல இருக்கிறார் என்று ரு.ஜூப்படுத்தினரேயன்றி, அவர் தான் இவர் என்று ஸ்தாபிக்கவே இல்லை. இவர் இன்னொருவரைப் போல இருப்பது சட்டப்படி குற்றமாகும் என்று நான் படித்த வரையில் எந்த சட்ட புஸ்தகத்திலும் காணப்படவில்லை. அப்படியே குற்றமாகுமா னால், அது இவரை சிருஷ்டித்த கடவுளின் குற்றமே அன்றி இவருடைய குற்றமாகாது. வாதி கட்சியார் முக்கியமாக மதிக்கும் சாட்சியமான ரேகை சாஸ்திரம் சம்பூர்ணமான சாஸ்திரமே அல்ல. தண்டனை அடைகிறவர்களுடைய ரேகைகளை எல்லாம் பார்த்து அந்த சாஸ்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதே அன்றி, உலகத்தில் உள்ள எல்லோருடைய ரேகைகளையும் சோதனை செய்து பார்க்கப்படவுமில்லை. ஒருவருடைய ரேகையைப் போல இந்த உலகத்தில் இன்னொருவருடைய ரேகை இருக்கவே இருக்காது என்றும் முடிவு கட்டப்படவில்லை. தோற்றத்தில் ஒருவரைப் போல இன்னொருவர் இருந்தால், அவர்களுடைய ரேகைகளிலும் அதிக வித்தியாசம் இருக்காது. அநேகமாய் இரண்டும் ஒன்று போலவே இருப்பது சகஜமே. ஆகவே, என் கட்சிக்காரர் பிறப்பிலேயே சட்டைநாத பிள்ளை என்பவரைப் போலவே இருப்பதால், இவருடைய ஒவ்வோர் அங்கத்திலும் ஒற்றுமை இருக்கிறது. அது போலவே கை ரேகைகளிலும் ஒற்றுமை இருக்கிறது. இதைக் கொண்டே இருவரும் ஒருவர் தான் என்று தீர்மானிப்பது நியாயமாகாது. அந்த இலாகாவை துரைத்தனத் தார் நியமித்திருப்பதைப் பற்றி, அவர்களை நாங்கள் முட்டாள்கள் என்று மதிப்பதாகக் கருதக்கூடாது. ரேகை சாஸ்திரத்தைக் கொஞ்ச துரம் வரையில் உதவியாக வைத்துக் கொள்ளலாமே யன்றி, முற்றிலும் அதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு அநியாயமாய் ஒரு நிரபராதியைத் தண்டிப்பது சட்ட சம்மதமானதல்ல. இதுவோ சாதாரணமான குற்றமல்ல. இன்னொருவர் செய்த குற்றத்தில் எட்டு வருஷம் இவருக்கு வருவதோடு, சிறைச்சாலையில் இருந்து, ஒடியதற்கு பல வருஷங்கள் சேரும். ஆகவே, இவருடைய ஆயிசே சிறைச்சாலைக்கு அர்ப்பணமாகிவிடும். நிரபராதியான