பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 - மாயாவிநோதப் பரதேசி ஒருவருடைய முழு ஆயுளும் இப்படி அநியாயமாய் அழியும்படி செய்து அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தீராத் துன்பத் திற்கும் துயரத்திற்கும் ஆளாக்குவது தர்ம சம்மத மாகாது. இப்பேர்ப்பட்ட முக்கியமான வழக்குகளில் வாதி கட்சியார் சாதாரணமாக தேக ஒற்றுமையையும், ரேகையின் ஒற்றுமை யையுமே போதுமான ருஜூவாக நம்பி இருக்கக்கூடாது; இயற்கை யிலேயே இரண்டு மனிதர்கள் ஒருவர் போல சிருஷ்டிக்கப்படுவது சகஜமே, அதுவுமன்றி, நான் முன்னர் சொன்னது போல, இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளாக இருந்து, பாலியத்தில் இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மனிதரிடம் போய்ச் சேர்ந்திருக்கலாம். அதை எல்லாம் ருஜூப்பிக்க என் கட்சிக்காரர் கடமைப்பட்டவர் அல்லர். அதுவுமன்றி, என் கட்சிக்காரர் தம்முடைய பூர்வீக வரலாறுகளை எல்லாம் உள்ளபடியே சொல்லி இருக்கிறார். அதில் எதுவும் அசம்பாவிதமே இல்லை; அதுவுமன்றி, அதில் எந்த விஷயமாவது பொய் என்றும் எதிர்க்கட்சிக்காரர் மெய்ப்பிக்க வில்லை. என் கட்சிக்காரருக்கு வேறே உறவினர் யாரும் இல்லை என்றால், அதில் அசம்பாவிதம் என்ன இருக்கிறது. இதோ நான் இருக்கிறேன்; எனக்கு வேறே யாரும் சொந்தக்காரர் இல்லை. அதே சட்டைநாத பிள்ளையை எடுத்துக் கொள்வோம். அவரையும், அவருடைய தம்பியையும் தவிர அவருக்கு வேறே சொந்தக்காரரே இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிந்த விஷயம். இதெல்லாம் உலகத்தில் சகஜமாக இருக்கக் கூடியதே யன்றி வேறல்ல; இந்த விஷயங்களை எல்லாம் எதிர்க் கட்சிக்காரர் தங்களுக்கு அனுகூலமாக வியாக்கியானம் செய்து கொள்வது நியாய சம்மதமாகாது. இவர்கள் என்ன செய்திருக்க வேண்டிய தென்றால், சட்டைநாத பிள்ளை சிறையில் இருந்து தப்பித்துக் கொண்டார் அல்லவா. அது முதல் அவர் இப்படி சாயப்புவாய் மாறுகிற வரையில் நடுநடுவில் அவர் செய்த காரியங்களுக்கு சாட்சியம் சம்பாதித்து, அவர் தான் இப்படி மாறியிருக்கிறார் என்று எல்லோரும் திருப்திகரமாக நம்பும்படியான ருஜூவைக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் எங்கேயோ போன ஒருவருக்கும், வேறு எங்கேயோ இருக்கும் இன்னொருவருக்கும் தேக ஒற்றுமை இருக்கிறதென்ற காரணத்தினால் அவர் தான் இவர்