பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 என்று சொல்வது கொஞ்சமும் பொருந்தவே பொருந்தாது. சட்டை நாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து ஓடிய பிறகு, இன்ன தையல்காரனிடம் துருக்க உடை தைத்தார்; இன்ன இடத்தில் சுன்னத் செய்து கொண்டார்; இன்ன இடத்தில் மற்ற இருவரையும் சந்தித்தார்; இன்னாருடைய வண்டியில் அந்த விட்டுக்குப் போனார். அவர் தமிழராய் இருந்து துருக்கருடைய உடைகளைத் தரித்த போது இன்னார் பார்த்தவர்கள் என்பது போன்ற சாட்சி யங்களைக் கொணர்ந்திருந்தால், அது எல்லோருக்கும் ஒப்புக் கொள்ளத் தக்கதாய் இருக்கும். சட்டைநாத பிள்ளை மறைந்த தற்கும், பிறகு அவர் இந்த ரூபம் அடைந்ததற்கும் மத்தியில் உள்ள இடைவெளியை இவர்கள் எப்படி சம்பந்தப் படுத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆகையால் இவர்கள் கொணர்ந் திருப்பது இத்தகைய பெருத்த குற்றத்திற்குப் போதிய ருஜூவா காது. இந்த மனிதரைக் கண்டு பிடிப்பவருக்கு பதினையாயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. அது பிரம்மாண்டமான தொகை ஆகையால், அதை அபகரித்துக் கொள்ள யாரும் எண்ணி சட்டைநாத பிள்ளையைப் போல் இருக்கும் மனிதர் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பிடித்து தண்டனைக்குக் கொண்டு வருவது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமே. போலீசாருக்கு இந்தக் குற்றவாளிகளைக் காட்டிக் கொடுத்தவர் ஜானிஜான் கான் சாயப்பு என்ற ஒருவர் என்று எதிர்க் கட்சிக்காரர்கள் தெரிவித்தனர். அவர் துருக்கர் ஆதலால், தம்முடைய ஜாதியாருக்குள் சட்டைநாத பிள்ளையைப் போல இருந்த இவரைப் பார்த்தவுடன், பதினையாயிரம் ரூபாயை அபகரிக்க வேண்டும் என்ற துர் எண்ணங் கொண்டு அவர் இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறார் என்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது. ஆகவே, ஜட்ஜ் துரையவர்கள் எல்லா அம்சங்களையும் தீர்க்கா லோசனை செய்து நிரபராதியான என் கட்சிக்காரரையும், அவரைச் சேர்ந்த மற்ற இருவரையும் கண்ணியமாக விடுதலை செய்து, அவர்களுக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கும் பொருள் நஷ்டத் திற்கும் ஈடாக குறைந்தது ஐயாயிரம் ரூபாயாவது கொடுக்கும்படி உத்தரவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.