பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மாயா விநோதப் பரதேசி அங்கு கூடியிருந்த வக்கீல்களும், ஜனங்களும் அப்படியே பிரமித்துப் போயினர். ஜட்ஜ் துரை கைதிகளை விடுதலை செய்து விடப் போகிறார் என்பது எல்லோருக்கும் நிச்சயமாகப் பட்டது. அதற்கிணங்க, ஜட்ஜ் துரையின் முகம் மிகுந்த மனக் குழப்பத்தைக் காட்டியது. அவர் பல தடவை தமது தலையைச் சொறிந்து நெற்றியை அழுத்திக் கொண்டு வாதிவக்கீலாகிய ராயரை நோக்கி, "பாரிஸ்டர் அவர்கள் சொன்னது போல, இந்த வழக்கு நிரம்பவும் முக்கியமானது; பல மனிதர்களுடைய ஆயிசுகாலம் முழுவதையும் இது பாதிக்கக்கூடியது. ஆகையால் இதுவரையில் கொடுக்கப்பட்ட சாட்சியம் மாத்திரம் போதுமானதென்று நானும் எண்ணவில்லை. இவர் சட்டைநாத பிள்ளையாக இருக்கலாம் என்று என் மனம் சந்தேகித்தாலும், ஜெயிலிலிருந்து ஓடினவர் இந்த ரூபமாக மாறினார் என்பதற்குக் கொஞ்சமும் ருஜூ கொடுக்கப் படவில்லை. ஆகையால் எல்லோரும் அரை மணி நேரம் பொறுங்கள். நான் என் தீர்மானத்தை எழுதிச் சொல்லிவிடுகிறேன்" என்று பேனாவைக் கையில் எடுத்துத் தீர்மானம் எழுத ஆரம்பித்தார். ஜனங்களும், மற்ற வக்கீல்களும், ஜட்ஜ் துரை சட்டைநாத பிள்ளையை விட்டுவிடப் போகிறார் என்று உடனே யூகித்துக் கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர், சர்க்கார் வக்கீல் முதலியோரது முகங்கள் வாட்டமும், அவமானமும் அடைந்து சூம்பின. கமாலுதீன் முதலிய கைதிகளின் முகம் மலர்ந்து சந்தோ ஷத்தைக் காட்டின. ஜட்ஜி எப்போது தமது தீர்ப்பை எழுதிப் படிப்பார் என்று எல்லோரும் ஒரே ஆவலாகவும் முற்றிலும் நிச்சப்தமாகவும் இருந்தனர். அந்தச் சமயத்தில் ஜனக்கும்பலின் நடுவில் இருந்து ஒரு பெருத்த கூக்குரல் உண்டாயிற்று. ஒருவர், "ஐயோ! பாம்பு பாம்பு ஒட்டிலிருந்து தொங்குகிறது. அதோ சட்டைநாத பிள்ளையினுடைய தலையின் மேல் விழுந்து விட்டது. ஒ சட்டைநாத பிள்ளை தலையை உதறும்," என்று இங்கிலீஷ் பாஷையில் பலமாகக் கூச்சலிட்டுக் கூற, அந்த விபரீதக் கூச்சலைக் கேட்ட ஜனங்களும் ஜட்ஜ் துரையும் திடுக்கிட்டு நடுநடுங்கிக் கைதிக் கூண்டிலிருந்த கமாலுதீன் சாயப்புவைப் பார்த்தனர். அவ்வாறு உண்டான ஓசையைக் கேட்ட அதே கூடிணத்தில் கமாலுதீன் சாயப்பு தம்மை மறந்து துள்ளிக் குதித்து