பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 247 மாசிலாமணியின் உத்தரவின்படி, தான் உப்பிலியப்பன் கோவிலில் இருந்த பாம்புப் பிடாரனிடம் நாகப்பாம்புகள் வாங்கிப் பெட்டிக்குள் வைத்து மன்னார்குடிக்குக் கொண்டு போய் திகம்பர சாமியாரிடம் சேர்ப்பித்து வந்ததாகவும், அதன் பிறகு சென்னை யில் பட்டாபிராம பிள்ளையின் பங்களாவில் ஆட்களோடு நுழைந்து மனோன்மணியம்மாளை அபகரித்து வர முயன்று ஆள் மாறாட்டமாக வேறொருவரை அபகரித்து வந்து மாசிலாமணி யிடம் சேர்த்ததாகவும், வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளிப்படுத்தும் எண்ணத்துடன் உதவிக்கு ரமாமணியையும் அழைத்துக் கொண்டு போனதாகவும், ஆள்களைப் பின்னால் வரச் சொல்லி இருந்ததாகவும், அதற்குள் ஒரு திருட்டுக் குற்றத்திற்காகத் தன்னை போலீசார் சிறைப்படுத்தியதாகவும் கூறினான். பிறகு உப்பிலியப்பன் கோவில் பாம்புப்பிடாரன் அடுத்த சாட்சியாக விசாரிக்கப்பட்டான். அதன் பிறகு நீர்மேல்குமிழி நீலலோசனி யம்மாள் ஆஜராகி வாக்கு மூலம் கொடுத்தாள். தனக்கும் ரமாமணி யம்மாள் முதலியோருக்கும் ரயிலில் பழக்கம் ஏற்பட்டதையும், தான் தனது சொத்தை அவர்களுக்கு எழுதி வைத்த வரலாற்றை யும், அதன் பிறகு கும்பகோணம் வந்த வரலாற்றையும் கூறிய தன்றி, தானும் அவர்களும் சேர்ந்து எழுதி ரிஜிஸ்டர் செய்து கொண்ட ஒப்பந்தப் பத்திரம், ரமாமணியம்மாள் மாசிலாமணிக்கு எழுதி தான் சமுத்திரத்தில் போட்டு விட்டதாகச் சொன்ன கடிதம் ஆகிய தஸ்தாவேஜிகளை ஆஜர்ப்படுத்தினாள். பிறகு சென்னை யில் இருந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்து, பட்டாபி ராம பிள்ளையின் வீட்டில் முதலில் நடந்த சம்பவம், பிறகு கோமளேசுவரன் பேட்டையில் ரமாமணியம்மாள் முதலியோர் அங்கஹரீனப் படுத்தப்பட்ட சம்பவம் முதலியவற்றிற்குச் சம்பந்தப் பட்ட விசாரணைக் காகிதங்களை ஆஜர் செய்வதோடு, சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்த கிராமபோன் யந்திரத்தையும் கொணர்ந்து அதற்குள் பதிந்திருந்த நீலலோசனியம்மாள் - ரமா மணியம்மாள் சம்பாஷணையை அது வெளியிடும்படி செய்து காட்டி, அது எந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட தென்பதைப் பற்றி பெரிய டாக்டர் எழுதியிருந்த கடிதத்தையும் தாக்கல் செய்தார். அவரைத் தவிர, சென்னையில் இருந்தும், மன்னார் குடியில்