பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மாயா விநோதப் பரதேசி ராம பிள்ளையின் பங்களாவில் உள்ள மனோன்மணியம்மாளை பலவந்தமாக அபகரித்து வர முயற்சித்தது. (4) முடிவில் ஆள்களையும் ரமாமணியம்மாளையும் அனுப்பி வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளிப்படுத்த எத்தனித்தது ஆகிய நான்கு பெரிய குற்றங்கள் மாசிலாமணியின் மீது சுமத்தப்பட்டன. மேலே குறிக்கப்பட்ட நான்காவது குற்றத்தைச் செய்ய உதவியாய் இருந்ததாக ரமாமணியம்மாளும், மற்ற ஆட்களும் குற்றம் சாட்டப் பட்டனர். அந்த விசாரணை நிரம்பவும் விரிவாக நடத்தப்பட்டது. ஏராள மான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அநேக தஸ்தாவேஜூகள் ஆஜர் செய்யப்பட்டன. மாசிலாமணி தான் ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்று அடியோடு மறுத்தான். பாரிஸ்டர் சிவசிதம் பரம் பிள்ளை தமது அபார வல்லமை முழுதையும் வெளிப்படுத்தி அவனுக்காக வெகு பாடுபட்டார். ஆதியில் இருந்து அவனுக்கு உதவி செய்த இடும்பன் சேர்வைகாரன் அப்ரூவராக எடுத்துக் கொள்ளப்பட்டான். சகலமான ரகசியங்களையும் அவன் வெளியிட்டு விடுவதென்றும், அவனை ஜட்ஜ் துரை மன்னித்து விட வேண்டும் என்றும் சென்னையிலேயே ஏற்பாடு செய்து கொள்ளப் பட்டிருந்தமையால், அவன் முதல் சாட்சியாக வந்து, ஆதியிலிருந்து மாசிலாமணி செய்த காரியங்களை எல்லாம் எடுத்துக் கூறினான். ஒரு குற்றவாளி அப்ரூவராக எடுத்துக் கொள்ளப் படுவதென்றால், அவனும், மற்ற குற்றவாளிக்கு சமதையாக அந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிற தாகையால் திகம்பர சாமியாரைக் கொல்ல முயற்சித்து, சென்னையில் நடந்த இரண்டு சம்பவங்கள் ஆகிய மூன்றிலும் அவன் சம்பந்தப்பட்டிருந்தது பற்றி அவன் அந்த மூன்று குற்றங்களுக்கும் அப்ரூவராக எடுத்துக் கொள்ளப் பட்டான். சட்டைநாத பிள்ளையை விடுவித்த விஷயத்தில், அவன் தனது ஆட்களை மாத்திரம் அனுப்பிவிட்டு தான் நேரில் போய் அதில் சம்பந்தப்படா திருந்தமையால் அவனது சாட்சியம் பயனற்ற தென்று சட்டைநாத பிள்ளையின் விசாரணையில் இடும்பன் சேர்வைகாரன் சாட்சியாக விசாரிக்கப்படவில்லை.